என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
குமாரபாளையத்தில் 30 கிலோ கெட்டுப்போன சிக்கன் பறிமுதல்
Byமாலை மலர்24 Aug 2022 3:21 PM IST
- குமாரபாளையம் பள்ளிபாளையம் பிரிவு சாலை அருகே மும்பை சவர்மா என்ற சிக்கன் வறுவல் கடையில் நேற்று இரவு சிலர் சிக்கன் சாப்பிட சென்றுள்ளனர்.
- 30லிருந்து 40 கிலோவிற்கும் அதிகமாக பழைய சிக்கன் குளிர்சாதன பெட்டியில் இருந்ததை கண்டு பிடித்தனர்.
குமாரபாளையம்:
குமாரபாளையம் பள்ளிபாளையம் பிரிவு சாலை அருகே மும்பை சவர்மா என்ற சிக்கன் வறுவல் கடையில் நேற்று இரவு சிலர் சிக்கன் சாப்பிட சென்றுள்ளனர்.
அது சாப்பிட முடியாத நிலையில் துர்நாற்றம் வீசவே,இது பற்றி கடை பணியாளர்களிடம் கேட்க, அவர்கள் மொழி தெரியாமல் எதையும் கண்டுகொள்ளாமல் வேலை செய்து கொண்டிருந்தனர்.
இது குறித்து உணவு பாதுகாப்பு அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சோதனை செய்ததில் 30லிருந்து 40 கிலோவிற்கும் அதிகமாக பழைய சிக்கன் குளிர்சாதன பெட்டியில் இருந்ததை கண்டு பிடித்தனர்.
அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது போன்று நகரில் உள்ள அனைத்து சில்லி சிக்கன் கடைகளை ஆய்வு செய்ய வேண்டும் என உணவு பாதுகாப்புத்துறையிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
×
X