search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடி மாநகர பகுதியில்  வார்டு குழு உறுப்பினர்களாக 300 பேர் நியமனம் - மாநகராட்சி கூட்டத்தில் ஒப்புதல் வழங்கி தீர்மானம்
    X

    மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் மாநகராட்சியின் அவசரக்கூட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.


    தூத்துக்குடி மாநகர பகுதியில் வார்டு குழு உறுப்பினர்களாக 300 பேர் நியமனம் - மாநகராட்சி கூட்டத்தில் ஒப்புதல் வழங்கி தீர்மானம்

    • தூத்துக்குடி மாநகரில் ராவ்பகதூர் குரூஸ்பர்னாந்தீஸ் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு .க. ஸ்டாலின் கடந்த ஆண்டு அறிவித்தார்.
    • ரோச் பூங்கா அருகில் நிலம் ஒதுக்கீடு செய்து அரசுக்கு கலெக்டர் மூலம் சமர்ப்பிக்கப்பட்டது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சியின் அவசரக்கூட்டம் மாநகர கூட்டரங்கில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் இன்று நடைபெற்றது.

    ஜெகன் பெரியசாமி

    கமிஷனர் சாருஸ்ரீ, துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியதும் மேயர் ஜெகன் பெரியசாமி பேசியதாவது:-

    தூத்துக்குடி மாநகரில் ராவ்பகதூர் குரூஸ்பர்னாந்தீஸ் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு .க. ஸ்டாலின் கடந்த ஆண்டு அறிவித்தார்.

    ரோச் பூங்கா

    இதனை தொடர்ந்து துறை ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, கிழக்கு மண்டலம் தெற்கு கடற்கரை சாலையில் உள்ள ரோச் பூங்கா அருகில் 20 சென்ட் நிலம் ஒதுக்கீடு செய்து அரசுக்கு மாவட்ட கலெக்டர் மூலம் சமர்ப்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த இடத்தில் மணிமண்டபம் அமைக்க தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை (நினைவகங்கள்) மூலம் அரசாணை வெளியிடப்பட்டது.

    எம்.ஜி.ஆர். பூங்கா

    இந்நிலையில் மணிம ண்டபம் அமைய உள்ள இடம் குறித்து பொதுமக்கள் தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து அமைச்சர் கீதாஜீவன், கலெக்டர் செந்தில்ராஜ், சமுதாய மக்கள் பிரதிநிதிகளிடையே நடத்த ப்பட்ட பேச்சுவார்த்தையில் கனிமொழி எம்.பி. அறிவுறுத்தலின்படி மாநகராட்சி பராமரிப்பில் உள்ள எம்.ஜி.ஆர்.பூங்காவில் கிழக்குப் பகுதியில் மணிமண்டபம் மற்றும் சிலை அமைக்க மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றி தருமாறு மாவட்ட கலெக்டர் கடிதம் அளித்தார்.

    அதன் அடிப்படையில் அங்கு இடம் வழங்க அனுமதி வழங்கி அரசுக்கு அனுப்பவும் ஏற்கனவே கடந்த ஜனவரி 24-ந்தேதி வழங்கப்பட்ட பழைய தீர்மானத்தை ரத்து செய்யவும் தீர்மானம் மாமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகிறது. அதற்கான நிலமாற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது என்பதை தெரிவித்தார்.

    பகுதிசபா

    தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டப்பிரிவு மற்றும் மாநகராட்சி சட்டப்பிரிவுகளின்படி வார்டு குழு மற்றும் பகுதிசபா செயல்படுவதற்கு ஏதுவாக தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சிகளின் விதிகள்2022-ன் படி ஒவ்வொரு வார்டு பகுதியில் ஒரு நபரை வார்டு குழு உறுப்பினர்களாக நியமனம் செய்ய உறுப்பினர் நியமன படிவம் வர பெற்றுள்ளதை கடந்த 28-ந் தேதி கூட்டத்தில் தீர்மானம் பரிந்துரை செய்துள்ளது.

    அதன்படி இன்றைய கூட்டத்தில் தகுதியான நபர்களை வார்டு குழு உறுப்பினர்களாக நியமனம் செய்யும் தீர்மானம் மாமன்ற கூட்டத்தில் வழங்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதனைத் தொடர்ந்து 300 பேர் மாநகர வார்டு குழு உறுப்பினர்களாக நியமனம் செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் மண்டல தலைவர்கள் கலைச்செல்வி திலகராஜ், அன்னலட்சுமி கோட்டுராஜா, நிர்மல்ராஜ், பாலகுருசாமி, குழு தலைவர்வர்கள் ராம கிருஷ்ணன், கீதாமுருகேசன், சுரேஷ் குமார், அதிர்ஷ்டமணி, கவுன்சிலர்கள் டாக்டர் சோமசுந்தரி, ரெங்கச்சாமி, விஜயகுமார், சுயம்பு, பச்சிராஜ், முத்துவேல், ராஜதுரை, வெற்றிச்செல்வன், ஜெயலட்சுமிசுடலைமணி, மந்திரமூர்த்தி, மேயர் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையர் நேர்முக உதவியாளர் துரைமணி, அதிகாரிகள் டாக்டர் அருண் குமார், சரவணன், காந்திமதி, பிரின்ஸ், சேகர், ராமச்சந்திரன் கலந்து கொண்டனர். தொடர்ந்து தேசிய ஒருமைப்பாட்டு தினத்தை முன்னிட்டு இன்று மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் தேசிய ஒருமைப்பாட்டு தின உறுதிமொழி எடுக்கப்பட்டது.

    Next Story
    ×