என் மலர்
உள்ளூர் செய்திகள்
திருச்செந்தூரில் பஸ்சில் ஏற முயன்ற பெண்ணிடம் 3½ பவுன் நகை பறிப்பு
- கலா குலசை கோவிலுக்கு சென்று விட்டு திருச்செந்தூர் பகத்சிங் பஸ் நிலையத்தில் இருந்து நெல்லை செல்ல கூடிய தனியார் பஸ்சில் ஏறினார்.
- அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி அவரது கழுத்தில் அணிந்திருந்த 3½ பவுன் தங்கச் சங்கிலியை மர்மநபர்கள் பறித்து சென்றனர்.
திருச்செந்தூர்:
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா நிறைவு பெற்ற நிலையில் பக்தர்கள் சொந்த ஊர் திரும்புகின்றனர்.
பெண்ணிடம் நகை பறிப்பு
இந்நிலையில் நெல்லை மாவட்டம் தேவர்குளத்தை சேர்ந்த கலா (வயது38) என்பவர் குலசை கோவிலுக்கு சென்று விட்டு திருச்செந்தூர் பகத்சிங் பஸ் நிலையத்தில் இருந்து சொந்த ஊர் செல்ல நெல்லை செல்ல கூடிய தனியார் பஸ்சில் ஏறினார்.
அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி அவரது கழுத்தில் அணிந்திருந்த 3½ பவுன் தங்கச் சங்கிலியை மர்மநபர்கள் பறித்து சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் பஸ்சில் இருந்து இறங்கி சென்று திருச்செந்தூர் தாலுகா போலீஸ் நிலை யத்திற்கு சென்று புகார் செய்தார்.
செல்போன் பறிப்பு
இதே போல் திருச் செந்தூரில் உள்ள நகைக்கடையில் வேலை பார்க்கும் கண்ணன் என்பவர் திருச்செந்தூர் பகத்சிங் பஸ் நிலையத்தில் இருந்து மற்றொரு பஸ்சில் சென்றுள்ளார். அவரிடமும் கூட்ட நெரிசலை பயன் படுத்தி அவரது செல் போனை பறித்து சென்றனர்.
இதுபோல் நேற்று பஸ்சில் ஏறிய சுமார் 10 பேரின் செல்போன் பறிக்கப்பட்டுள்ளதாக பயணிகள் புகார் தெரிவித்த னர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.