என் மலர்
உள்ளூர் செய்திகள்

X
திட்டக்குடி பகுதியில் கஞ்சா விற்ற 4 பேர் கைது
By
மாலை மலர்1 Nov 2022 12:54 PM IST

- திட்டக்குடி பகுதியில் கஞ்சா விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
- பின்னர் 3 பேரையும் ஜாமீனில் விடுவித்தனர்.
கடலூர்:
திட்டக்குடி, ராமநத்தம் பகுதிகளில் தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி ரகசிய தகவலின் பேரில் நேற்று ராமநத்தம் பொதுப்பணித்துறை அலுவலகம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்துக்கொண்டும், குடித்துக்கொண்டும் இருந்த 4 பேரை ராமநத்தம் போலீசார் கைது செய்தனர். இதேபோல் திட்டக்குடி பஸ் நிலையத்தில் ஆவின் பாலகம் அருகில் நேற்று மாலை 10 கிராம் கஞ்சா வைத்திருந்த மூன்று பேரை திட்டக்குடி போலீசார் கைது செய்தனர். பின்னர் 3 பேரையும் ஜாமீனில் விடுவித்தனர்.
Next Story
×
X