search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பில்லூர் 3-வது குடிநீர் திட்ட குழாய் பதிக்கும் பணி 47 சதவீதம் நிறைவடைந்துள்ளது-கலெக்டர் கிராந்திகுமார் பாடி தகவல்
    X

    பில்லூர் 3-வது குடிநீர் திட்ட குழாய் பதிக்கும் பணி 47 சதவீதம் நிறைவடைந்துள்ளது-கலெக்டர் கிராந்திகுமார் பாடி தகவல்

    • தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் ரூ.740 கோடியில் பில்லூர் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
    • 41 கி.மீ தூரத்திற்கு பணிகள் முடிவுற்றது. மீதமுள்ள பணிகள் நடைபெற்று வருகிறது.

    கோவை,

    கோவை மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதி களுக்கு குடிநீர் வழங்கும் விதமாக பவானி ஆற்று நீரை ஆதாரமாக கொண்டு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் ரூ.740 கோடியில் பில்லூர் குடிநீர் திட்டம் செயல்ப டுத்தப்படுகிறது.

    இந்த பணிகளை கலெக்டர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கோவை மாநக ராட்சியுடன் குறிச்சி, குனியமுத்தூர், கவுண்டம்பா ளையம் ஆகிய நகராட்சிகளிலும், 7 பேரூ ராட்சிகளும், ஒரு ஊ ராட்சியும் இணைக்கப்பட்டு மாநகராட்சி விரிவு செய்யப்பட்டது.

    இதில் விரிவு படுத்தப்பட்ட பகுதிகளுக்கு தேவையான குடிநீரை வழங்கும் பொருட்டு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் பில்லூர் 3-வது குடிநீர் திட்டம் அமைக்கப்பட்டு ரூ.740 கோடி செலவில் திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இதில் நீரேற்று நிலையம், குழாய் அமைக்கும் பணிகள், சுத்திகரிப்பு நிலையம், சுரங்கப்பாதை அமைத்தல் பணிகள் நடந்து வருகிறது.

    இந்த திட்டத்திற்கு மொத்தம் 90.76 கி.மீ தூரத்துக்கு குழாய் பதிக்க வேண்டும்.

    தற்போது வரை 41 கி.மீ தூரத்திற்கு பணிகள் முடிவுற்றது. மீதமுள்ள பணிகள் நடைபெற்று வருகிறது.

    குழாய்கள் அமைக்கும் பணிகள் 47 சதவிகிதம் முடிவுற்றுள்ளது. சுத்திகரிப்பு நிலைய பணிகள் 93 சதவிகிதம் முடிவுற்றுள்ளது. மீதமுள்ள பணிகள் நடைெபற்று வருகிறது.சுரங்கபாதை வடி வமைப்பு மற்றும் கட்டுமான பணிகள் முடிவுற்றுள்ளது. குழாய்கள் அமைக்கவும், பிரதான தரைமட்ட தொட்டி அமைக்க 156 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது.இதில் 35.50 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலமாகவும், 121 ஏக்கர் நிலம் தனியாருக்கு சொந்தமானது. அங்கு நிலத்தை கையகப்படுத்தும் பணிகளை முடித்து இந்த திட்டத்தை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×