என் மலர்
உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடியில் வாலிபரை அரிவாளால் வெட்டிய 6 பேர் கைது
- சக்திவேல் தனது வீட்டு அருகே நின்ற போது அங்கு வந்த கும்பல் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்றது.
- தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம், சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு கீதாஜீவன் நகரை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 21) கூலித் தொழிலாளி.
அரிவாள் வெட்டு
இவர் தனது வீட்டு அருகே நின்ற போது அங்கு வந்த கும்பல் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்றது.
இதில் படுகாயம் அடைந்த சக்திவேல் தூத் துக்குடி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டு அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் தாக்குதல் நடத்திய மர்ம கும்பல் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில், நகர துணை போலீஸ் சூப்பிரண்டு சத்யராஜ் மேற்பார்வையில், தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம், சப்-இன்ஸ்பெக்டர் சிவக் குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்ட னர்.
6 பேர் கைது
இதில் தூத்துக்குடி முத்தம்மாள் காலனியைச் சேர்ந்த வேல்முருகன், கண்ணன், முள்ளக்காடு முனியசாமிநகர் சிவா, பாரதிநகர் கெளிவின்ஸ், தலைவன் வடலியை முத்துக்குமார் மற்றும் இளஞ்சிரார் ஒருவர் உள்ளிட்ட 6 பேர் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து 6 பேரையும் கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.