என் மலர்
உள்ளூர் செய்திகள்

600 கிலோ ரேஷன் கடத்தல் அரிசி சிக்கியது
- சேலம் கொண்டலாம்பட்டியில் ரேஷன் அரிசி கடத்தலில் சிக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
- அதில் 600 கிலோ எடை கொண்ட ரேஷன் அரிசி கடத்தி கொண்டுவரப்பட்டது தெரியவந்தது.
சேலம்:
சேலம் கொண்டலாம்பட்டி பகுதியில் ஒரு வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்திச் செல்லப்படுவதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் மலர்விழி தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று வாகன சோதனை நடத்தினர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் ப்வேகமாக வந்த ஒரு சரக்கு வாகனத்தை மறித்து சோதனை செய்தனர். அதில் 600 கிலோ எடை கொண்ட ரேஷன் அரிசி கடத்தி கொண்டுவரப்பட்டது தெரியவந்தது. மேலும் வாகனத்தில் இருந்த கொண்டலாம்பட்டியை சேர்ந்த ஆறுமுகம், பால சவுந்தர் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது பொதுமக்களிடம் இருந்து குறைந்த விலையில் வாங்கி மாவாக அரைத்து அதனை ஓட்டல்களில் விற்பதற்காக கொண்டு சென்றதும் தெரியவந்தது . இதையடுத்து அவர்களை கைது செய்து அரிசியுடன் வாகனத்தை பறிமுதல் செய்யப்பட்டது.