என் மலர்
உள்ளூர் செய்திகள்
விருத்தாசலம் அருகே வீடு புகுந்து செயின் பறித்த 2 பேருக்கு 7 ஆண்டு சிறை
- விருத்தாசலம் காவல்துறையினர் 4 பேர் மீது வழக்குப் பதிந்தனர்
- வழக்கில் அரசு தரப்பில் கூடுதல் அரசு வக்கீல் பெரிய.செந்தில்குமார் வாதாடினார்.
கடலூர்:
கடந்த 2011-ஆம் ஆண்டு விருத்தாசலம் வி.என்.ஆர். நகரை சேர்ந்த ஜெயராஜ் என்பவரின் மனைவி அமுதா வீட்டில் தனியாக இருந்தபோது, சிலிண்டர் வேண்டுமா என கேட்பதுபோல் 4 பேர் வீட்டின் கதவைத் தட்டியுள்ளனர். அமுதா சிலிண்டர் வேண்டாம் என்றார். ஆனாலும் அங்கிருந்து செல்லாத 4 நபரும் "தண்ணீர் கொடுங்கள்" எனக் கேட்டுக்கொண்டே வீட்டுக்குள் சென்று அமுதா வைக் கொடூரமாகத் தாக்கி அவரது கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் செயினைப் பறித்துச் சென்றனர். இதுகுறித்து விருத்தா சலம் காவல்துறையினர் 4 பேர் மீது வழக்குப் பதிந்தனர். இந்த வழக்கு விருத்தாசலம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் தீர்ப்பை முதன்மை சார்பு நீதிமன்ற நீதிபதி ஜெகதீஸ்வரி நேற்று வழங்கினார்.
இதில் குற்றம் சாட்ட ப்பட்ட கண்டியாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ராஜதுரை மற்றும் மணலூர் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் ஆகிய 2 பேரும் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டதால் இந்தியத் தண்டனைச் சட்டம் 454 பிரிவின் கீழ் 7 ஆண்டு சிறைத் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும், இந்தியத் தண்டனைச் சட்ட பிரிவு 394, 397-ன் படி ஏழு ஆண்டு சிறைத் தண்டனையும், 2 தண்டனைகளையும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என நீதிபதி தீர்ப்புளித்தார். அபராதம் கட்டத் தவறினால் மேலும் ஒரு மாதம் சிறைத் தண்டனை அனுப விக்க வேண்டும் என உத்தரவிட்டார். தீர்ப்புக்குப் பின் ராஜதுரை மற்றும் சந்திரசேகர் ஆகி யோரை போலீசார் சிறைச்சாலை க்கு அழைத்துச் சென்றனர். மேலும் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆனந்தக்குடி கிராமத்தைச் சேர்ந்த வீரப்பன், குடிகாடு கிராமத்தைச் சேர்ந்த பரமானந்தன் ஆகிய 2 பேரையும் நீதிபதி விடுதலை செய்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் கூடுதல் அரசு வக்கீல் பெரிய.செந்தில்குமார் வாதாடினார்.