என் மலர்
உள்ளூர் செய்திகள்

X
பறிமுதல் செய்யப்பட்ட லாரிகளை படத்தில் காணலாம்.
அதிக பாரம் ஏற்றிச்சென்ற 9 லாரிகள் பறிமுதல்
By
மாலை மலர்10 July 2023 3:04 PM IST

- பெங்களூரு நோக்கி சென்ற 9 லாரிகளை மடக்கி சோதனை செய்தபோது, அந்த லாரிகள் அதிக பாரம் ஏற்றிச்சென்றது தெரியவந்தது.
- 9 லாரிகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், அபராத தொகையாக ரூ.4,76,000- வசூலிக்கப்பட்டது.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டார போக்குவரத்து அலுவலர் துரைசாமி தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர் மணிமாறன், கிருஷ்ணகிரி ஆய்வாளர் அன்புசெழியன் மற்றும் செக்போஸ்ட் வாகன ஆய்வாளர் லியோ அந்தோணி ஆகியோர், ஓசூர் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, ஓசூரிலிருந்து எம்.சாண்ட் பாரம் ஏற்றிக்கொண்டு கர்நாடக மாநிலம் பெங்களூரு நோக்கி சென்ற 9 லாரிகளை மடக்கி சோதனை செய்தபோது, அந்த லாரிகள் அதிக பாரம் ஏற்றிச்சென்றது தெரியவந்தது.
இதையடுத்து அந்த 9 லாரிகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், அபராத தொகையாக ரூ.4,76,000- வசூலிக்கப்பட்டது.
Next Story
×
X