என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![கணவருடன் மொபட்டில் சென்ற பெண்ணிடம் 4 பவுன் செயின் பறிப்பு கணவருடன் மொபட்டில் சென்ற பெண்ணிடம் 4 பவுன் செயின் பறிப்பு](https://media.maalaimalar.com/h-upload/2023/06/19/1901105-untitled-1.webp)
X
கணவருடன் மொபட்டில் சென்ற பெண்ணிடம் 4 பவுன் செயின் பறிப்பு
By
மாலை மலர்19 Jun 2023 3:11 PM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- கழுத்தில் அணிந்து இருந்த 4 பவுன் தங்க செயினை பறித்து தப்பிச் சென்றனர்
- பறித்து தப்பிச் சென்ற வாலிபர்களை தேடி வருகிறார்கள்.
கோவை,
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள அங்காலகுறிச்சியை சேர்ந்தவர் மனோகரன். டிரைவர். இவரது மனைவி மகாலட்சுமி (வயது 38). சம்பவத்தன்று கணவன்-மனைவி இருவரும் விடுதியில் தங்கி படிக்கும் மகனை பார்ப்பதற்காக மாெபட்டில் புறப்பட்டனர். மொபட்டை மனோகரன் ஓட்டிச் சென்றார்.
மொபட் சமத்தூர் மணல்மேடு அருகே சென்று கொண்டு இருந்தது. அப்போது இவர்களை மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் பின் தொடர்ந்து வந்தனர். அவர்கள் கண்இமைக்கும் நேரத்தில் மகாலட்சுமி கழுத்தில் அணிந்து இருந்த 4 பவுன் தங்க செயினை பறித்து தப்பிச் சென்றனர். இதில் அதிர்ச்சியடைந்த மகாலட்சுமி இது குறித்து காட்டூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவருடன் மொபட்டில் சென்ற பெண்ணிடம் 4 பவுன் தங்க செயினை பறித்து தப்பிச் சென்ற வாலிபர்களை தேடி வருகிறார்கள்.
Next Story
×
X