என் மலர்
உள்ளூர் செய்திகள்

X
பாலியல் பலாத்காரம் செய்த சிறுமியை கடத்திய கொத்தனார் மீது வழக்கு
By
மாலை மலர்2 April 2023 2:00 PM IST

- கைது செய்யப்பட்டு போக்சோவில் சிறையில் அடைக்கப்பட்டார்.
- பெற்றோர்கள் புதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
கடலூர்:
பண்ருட்டி அடுத்த தொரப்பாடியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 30). கொத்தனார், இவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை தனியாக அழைத்துச் சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு போக்சோவில் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த மணிகண்டன் நேற்று முன் தினம் இரவு வீட்டில் இருந்த அதே சிறுமியை கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமியின் பெற்றோர்கள் புதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை தேடி வருகின்றனர்.
Next Story
×
X