என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஓடும் பஸ்சில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை

- மாணவியிடம் தகாத வார்த்தைகள் பேசி கொலை மிரட்டல் விடுத்தார்.
- கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
கோவை
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள மலையாண்டி பட்டிணத்தை சேர்ந்தவர் 19 வயது மாணவி.
இவர் அந்த பகுதியில் உள்ள கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று மாணவி அரசு பஸ்சில் கல்லூரிக்கு சென்றார். அப்போது மாணவியின் பின் இருக்கையில் அரசு போக்குவரத்து கழகத்தில் மெக்கானிக்காக வேலை பார்க்கும் கோட்டூர் திருவள்ளூவர் காலனியை சேர்ந்த ரங்க நாதன் (வயது 37) என்பவர் அமர்ந்து இருந்தார்.
அவர் ஓடும் பஸ்சில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதில் அதிர்ச்சியடைந்த மாணவி தட்டி கேட்டார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த ரங்கநாதன் மாணவியிடம் தகாத வார்த்தைகள் பேசி கொலை மிரட்டல் விடுத்தார்.
இது குறித்து மாணவி கோட்டூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் ஓடும் பஸ்சில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ரங்கநாதனை கைது செய்தனர்.
அவர் மீது பெண்ணை மானபங்கம் படுத்துதல், ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் ரங்கநாதனை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.