என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நாமக்கல் அருகே கரடி தாக்கிய விவசாயிக்கு ஆஸ்பத்திரியில் தொடர் சிகிச்சை
- விவசாயியான இவர் நேற்று தன் தோட்டத்தில் வேலை செய்ய நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு முட்புதூரில் பதுங்கி இருந்த கரடி, திடீரென அவர் மீது பாய்ந்து அவரது கை, முதுகு உள்ளிட்ட உடலின் பல பகுதிகளில் கடித்து குதறியது.
- அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை வளப்பூர் நாடு ஓலையார் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 45). விவசாயியான இவர் நேற்று தன் தோட்டத்தில் வேலை செய்ய நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு முட்புதூரில் பதுங்கி இருந்த கரடி, திடீரென ராஜேந்திரன் மீது பாய்ந்து அவரது கை, முதுகு உள்ளிட்ட உடலின் பல பகுதிகளில் கடித்து குதறியது.
இதில் ராஜேந்திரன் படுகாயம் அடைந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து கரடியை விரட்டினர்.
பின்னர் ராஜேந்திரனை மீட்டு செம்மேடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே வன அலுவலர் சுப்பராயன் தலைமையிலான வனத்துறையினர்,
கரடியின் கால் தடத்தை வைத்து ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதி மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது.