search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாக பஞ்சமியை முன்னிட்டு திருவிழா
    X

    நாக பஞ்சமியை முன்னிட்டு திருவிழா

    • அனையட்டி கோவிலில் நாகராஜருக்கு சிறப்பு அலங்காரம்
    • டானிங்டன் கருமாரியம்மன் கோவிலிலும் நாக பஞ்சமி பூஜை நடைபெற்றது

    அரவேணு

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கீழ் அனையட்டி கிராமத்தில் உள்ள நாகராஜர் கோவிலில் ஆடிமாத நாக பஞ்சமியை முன்னிட்டு திருவிழா நடைபெற்றது.

    இந்த நாளில் நாக தேவதைகள், கருடாழ்வாரை வழிபட்டால் அனைத்து விதமான சர்ப்ப தோஷம், பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம். ஆடிமாத நாக பஞ்சமியை முன்னிட்டு காலை 10.30 மணி முதல் மதியம் 12 மணி வரை நாகராஜருக்கு அபிஷேக பூஜை, மதியம் 1.30 மணி முதல் 2 மணி வரை அலங்கார பூஜை நடந்தது.

    மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அனையட்டி கோவிலில் நாகராஜர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதே போல கோத்தகிரி டானிங்டன் கருமாரியம்மன் கோவிலிலும் நாக பஞ்சமி பூஜை சிறப்பாக நடைபெற்றது. இதில் கோத்தகிரி மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள கிராம மக்கள் கலந்து கொண்டனர்

    Next Story
    ×