என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![திருச்செந்தூர் பாதயாத்திரை பக்தர்கள் தங்கிச் செல்ல நவீன பூங்கா-தூத்துக்குடி மாநகர கூட்டத்தில் மேயர் அறிவிப்பு திருச்செந்தூர் பாதயாத்திரை பக்தர்கள் தங்கிச் செல்ல நவீன பூங்கா-தூத்துக்குடி மாநகர கூட்டத்தில் மேயர் அறிவிப்பு](https://media.maalaimalar.com/h-upload/2022/07/30/1738302-08tu-meyar-news.jpg)
கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி பேசியதையும்,மஞ்சப்பையை உயர்த்தி காட்டிய கவுன்சிலர்களையும் படத்தில் காணலாம்.
திருச்செந்தூர் பாதயாத்திரை பக்தர்கள் தங்கிச் செல்ல நவீன பூங்கா-தூத்துக்குடி மாநகர கூட்டத்தில் மேயர் அறிவிப்பு
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலை உப்பாற்று ஓடை ரவுண்டானா பகுதியில் தற்போது பாலம் வேலை நடந்து வருகிறது.
- மீண்டும் மஞ்சப்பை உபயோகப்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திட கவுன்சிலர்கள் அனைவருக்கும் மஞ்சப்பை வழங்கப்பட்டது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாநக ராட்சியின் அவசரக் கூட்டம் மாநகர கூட்டரங்கில் நடை பெற்றது. மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கினார். ஆணையாளர் சாருஸ்ரீ, துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி கூறியதாவது:-
தூத்துக்குடி மாநகரில் அனைத்து வார்டு பகுதிகளிலும் ஒரே சீரான அளவில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதி, ஏற்கனவே இருந்த பகுதி என்ற வேறுபாடு தெரியாத வகையில் முழு அளவிலான வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அனைத்து வார்டு கவுன்சிலரின் கோரிக்கை களும் நிறைவேற்றப்பட்டு வருகிறது.
நவீன பூங்கா
தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலை உப்பாற்று ஓடை ரவுண் டானா பகுதியில் தற்போது பாலம் வேலை நடந்து வருகிறது. அதை யொட்டி 2.5 ஏக்கர் மாநகராட்சி நிலம் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டு அங்கு திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்கள் தங்கி ஓய்வெடுத்து செல்லும் வகையில் குளியலறை, கழிப்பறை வசதிகளுடன் நவீன பூங்கா அமைக்கப்பட இருக்கிறது.
திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆண்டு முழுவதும் நடைபெறும் விழாக்களில் கலந்து கொள்ள பாதயாத்திரையாக மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் உட்பட பல்வேறு வெளி மாவட்டத்தில் வரக்கூடிய 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இந்த வழியாகச் செல்கிறார்கள். இரவு 8 மணிக்கு மேல் செல்லக்கூடிய மக்கள் பாதுகாப்பாகத் தங்கி செல்வதற்கு வசதியாக இந்த பூங்கா பயன்படும் இதை அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்.
சென்னையில் சர்வதேச சதுரங்க போட்டியை வரலாற்று சிறப்புமிக்க முறையில் சிறப்பாக நடத்தி வரும் தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
கடந்த காலத்தில் கட்டப்பட்டு இருக்கக்கூடிய ஆஷ்துரை நினைவு மண்டபம் குறித்து தவறான தகவல் பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
தீர்மானங்கள்
தொடர்ந்து மாநகராட்சியில் ரூ.45 கோடியே 19 லட்சத்தில் 43.5 கி.மீ நீளத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்கும் பணி கூடுதல் பள்ளி கட்டிடம் கட்டும் பணி வணிக வளாக கடைகள் மறு ஏலம் விடுதல், மாநகர பகுதிகளில் பொது மக்களுக்கு அச்சுறுத்தலாகும் போக்கு வரத்துக்கு இடையூறாகவும் சுற்றி திரியும் தெரு நாய்களுக்கு கருத்தடை செய்தல், பன்றிகளை பிடிக்க நடவடிக்கை எடுத்தல் உட்பட 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மஞ்சப்பை
கூட்டத்தில் மாநகரில் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தடுத்து மீண்டும் மஞ்சப்பை உபயோகப்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திட கவுன்சிலர்கள் அனைவருக்கும் மஞ்சப்பை வழங்கப்பட்டது.
கூட்டத்தில் மண்டல தலைவர்கள் கலைச்செல்வி திலகராஜ், அன்னலட்சுமி கோட்டுராஜா, நிர்மல்ராஜ், நகரமைப்பு குழு தலைவர் ராமகிருஷ்ணன், பணிக்குழு தலைவர் கீதாமுருகேசன், சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமார், கல்விக் குழுத் தலைவர் அதிர்ஷ்டமணி, அதிகாரிகள் ரூபன் சுரேஷ், பொன்னையா, சரவணன், காந்திமதி, பிரின்ஸ், சேகர், ராமச்சந்திரன், கவுன்சி லர்கள் டாக்டர் சோமசுந்தரி, விஜயகுமார், சுயம்பு, பச்சிராஜ், முத்துவேல், ராஜதுரை, சந்திரபோஸ், வெற்றிச்செல்வன், விஜயலட்சுமி சுடலைமணி, மந்திரமூர்த்தி உட்பட அனைத்து கவுன்சிலர்கள், மேயர் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையர் நேர்முக உதவியாளர் துரைமணி, அதிகாரிகள் ரூபன் சுரேஷ், பொ ன்னையா, சரவணன், காந்திமதி, பிரின்ஸ், சேகர், ராமச்சந்திரன் உட்பட அதிகாரிகள், அலுவலர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.