search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டெம்போ ஓட்டுனர்கள் சங்கத்தின் புதிய கிளை
    X

    டெம்போ ஓட்டுனர்கள் சங்கத்தின் புதிய கிளை

    • அண்ணா தொழிற்சங்கத்தின் சார்பில் தொழிலாளர்களுக்கு சீருடைகள் வழங்கப்பட்டன.
    • பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    ஓசூர்,

    ஓசூர் அருகே பேகேப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட ராஜேஸ்வரி லே-அவுட் பகுதியில், அண்ணா தொழிற்சங்கத்தின் சார்பில், டெம்போ ஓட்டுனர்கள் சங்கத்தின் புதிய கிளை தொடங்கப்பட்டது.

    விழாவிற்கு, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார். பேகேப்பள்ளி ஊராட்சி தலைவர் அருண்குமார் வரவேற்றார். இதில், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணரெட்டி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, அண்ணா தொழிற்சங்கத்தின் கொடியை ஏற்றி வைத்து, பெயர் பலகையை திறந்து வைத்தும், புதிய கிளையை தொடங்கி விழாவில் பேசினார்.

    இதனைத்தொடர்ந்து அண்ணா தொழிற்சங்கத்தின் சார்பில் தொழிலாளர்களுக்கு சீருடைகள் வழங்கப்பட்டன. பின்னர் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    மேலும் விழாவில், மாவட்ட துணை செயலாளர் மதன், அமைப்பு சாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் சென்னகிருஷ்ணன், ஓசூர் மாநகராட்சி மண்டல தலைவர் ஜெயப்பிரகாஷ், பகுதி செயலாளர்கள் அசோகா, ராஜி, உள்பட பலர் பேசினர். மேலும் இதில், கட்சி நிர்வாகிகள், தொழிற்சங்கத்தினர் உள்பட பலர் கலந்துகொண்டனர், முடிவில், ஒன்றிய கவுன்சிலர் முரளி நன்றி கூறினார்.

    Next Story
    ×