என் மலர்
உள்ளூர் செய்திகள்
விளாத்திகுளத்தில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான புதிய பள்ளி கட்டிடம்
- மாற்றுத்திறன் மாணவர்களுக்கான புதிய பள்ளி கட்டிடம், புனரமைக்கப்பட்ட கட்டிடம், புதிய பொது சுகாதார வளாகம் திறப்பு விழா நடைபெற்றது.
- விளாத்திகுளம் பஸ் நிலையம் உட்புறத்தில் ரூ.25 லட்சத்தில் கட்டப்பட்ட ஆண், பெண் இருபாலருக்குமான பொது சுகாதார வளாகத்தையும் அமைச்சர் கீதா ஜீவன் திறந்து வைத்தார்.
விளாத்திகுளம்:
விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஜே.எஸ்.டபிள்யூ நிறுவனம் சார்பில் ரூ.75 லட்சம் மதிப்பில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான புதிய பள்ளி கட்டிடம், புனரமைக்கப்பட்ட கட்டிடம், புதிய பொது சுகாதார வளாகம் திறப்பு விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு எம்.எல்.ஏ. மார்கண்டேயன் தலைமை தாங்கினார். அமைச்சர் கீதா ஜீவன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் ரூ.25 லட்சம் மதிப்பில் பிறப்பு முதல் 14 வயதுடைய மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்குக்கான விளையாட்டு உபகரணங்களுடன் கூடிய கல்வி மைய கட்டிடத்தையும், ரூ.25 லட்சம் மதிப்பிலான பள்ளியின் அனைத்து புணர் அமைப்பு செய்யப்பட்ட கட்டிடத்தையும், விளாத்திகுளம் பஸ் நிலையம் உட்புறத்தில் ரூ.25 லட்சத்தில் கட்டப்பட்ட ஆண், பெண் இருபாலருக்குமான பொது சுகாதார வளாகத்தையும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தொடர்ந்து பள்ளி மாணவர்களுடன் இனிப்புகள் வழங்கி கலந்துரையாடினார்.
நிகழ்ச்சியில் ஜே.எஸ்.டபிள்யூ திட்ட மேலாளர் தென்னவன், மண்டல மேலாளர் பாரதி பழனிச்சாமி, அலுவலர் சுப்பிரமணி, விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கவேல், முத்துக்குமார் பள்ளி தலைமை ஆசிரியை இந்திராணி, தாசில்தார் ராமகிருஷ்ணன், மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்மசக்தி, விளாத்திகுளம் பேரூராட்சி தலைவர் சூர்யா அயன் ராஜ், துணைத்தலைவர் வேலுச்சாமி, விளாத்திகுளம் ஒன்றிய செயலாளர்கள் அன்புராஜன், ராமசுப்பு சின்ன மாரிமுத்து, புதூர் ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், செல்வராஜ், மும்மூர்த்தி, மாவட்ட கவுன்சிலர்கள் ராமலிங்கம், நடராஜன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் இம்மானுவேல், மகேந்திரன், வார்டு கவுன்சிலர்கள் ,வார்டு செயலாளர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.