என் மலர்
உள்ளூர் செய்திகள்

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மார்பக புற்றுநோய் சிறப்பு மருத்துவ முகாம் - நாளை நடக்கிறது
- தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிறப்பு மருத்துவ முகாம் நாளை நடைபெற உள்ளது.
- மருத்துவர்கள் பலர் கலந்து கொண்டு சிகிச்சை அளிக்க உள்ளனர்.
தென்காசி:
பிங்க் அக்டோபர் 2022 கொண்டாடுவதையொட்டி தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் மார்பக புற்றுநோய் பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு சிறப்பு மருத்துவ முகாம் நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் 2 மணி வரை நடைபெற உள்ளது.
முகாமை இணை இயக்குனர் நலப்பணிகள் மருத்துவர் பிரேமலதா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைக்கிறார். மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் முரளி சங்கர் தலைமையில் முகாம் நடைபெறுகிறது.
இதில் 35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மார்பில் கட்டி, வலி, மார்பகக் காம்புகள் உள்போகுதல், மார்பகக் காம்புகளில் இருந்து திரவம் வருதல், மார்பக சருமம் சிவந்து போதல், குடும்பத்தில் யாருக்கேனும் மார்பக புற்றுநோய் இருத்தல், போன்ற ஏதேனும் தொந்தரவு இருப்பின் அவர்கள் முகாமில் கலந்துகொண்டு பயன் பெறலாம். தென்காசி மாவட்டத்தைச் சார்ந்த அரசு அறுவை சிகிச்சை நிபுணர்கள், மகப்பேறு நிபுணர்கள்,ஸ்கேன் மருத்துவர்கள்,பொது மருத்து வர்கள் என பலர் கலந்து கொண்டு பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்க உள்ளனர்.
இதற்கான ஏற்பாடுகளை தென்காசி அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப் பாளர் ஜெஸ்லின், உறைவிட மருத்துவர் ராஜேஷ் ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் முகாமில் மார்பக சுயபரிசோதனை முறைகள் விளக்கப்படுகின்றன. இம்முகாமில் தென்காசி மாவட்ட பெண்கள் கலந்துகொண்டு, மார்பக பிரச்சினைகள் இருப்பின் அவை ஆரம்ப நிலையிலேயே கண்ட றியப்பட்டு சரியான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அதன் மூலம் பயன்பெறலாம் என கேட்டுக் கொள்ளபட்டுள்ளது.