search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அதிக விபத்துகள் நடக்கும் பகுதிகளில் அதிகாரிகள் குழு ஆய்வு
    X

    அதிக விபத்துகள் நடக்கும் பகுதிகளில் அதிகாரிகள் குழு ஆய்வு

    • நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் மட்டும் சாலை விபத்துகளில் 450 பேர் வரை உயிரிழந்தனர்.
    • தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையை இந்த குழுவினர் தமிழக அரசிடம் சமர்ப்பிக்க உள்ளனர். அதன் பிறகு விபத்துக்களை தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் மட்டும் சாலை விபத்துகளில் 450 பேர் வரை உயிரிழந்தனர். 1000-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்து உள்ளனர். மாநில நெடு ஞ்சாலைகளில் குறிப்பிட்ட பகுதிகளில் அடிக்கடி விபத்துகள் நடப்பதை தவிர்க்கும் வகையில் தமிழக சாலை கண்காணிப்பு ஆராய்ச்சி இயக்குனர் தலைமையில் 3 உதவி இயக்குனர்கள் கொண்ட குழு இன்று நாமக்கல் வந்தது. அவர்கள் நாமக்கல் திருச்சி சாலையில் அதிக அளவில் விபத்துகள் நடைபெறும் சின்ன வேப்பநத்தம், புதுப்பட்டி பகுதிகளிலும், சேந்தமங்கலம் சாலையில் வேட்டாம்பாடி, முத்துக்காப்பட்டி பகுதிகளிலும், திருச்செங்கோட்டில் 2 இடங்களிலும் சம்பந்தப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிடுகிறார்கள்.

    இந்த ஆய்வு பணியானது 4 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற உள்ளது. அதன் பிறகு விபத்து நிகழாமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையை இந்த குழுவினர் தமிழக அரசிடம் சமர்ப்பிக்க உள்ளனர். அதன் பிறகு விபத்துக்களை தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×