என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![சாலை விபத்தில் பெண் பலி சாலை விபத்தில் பெண் பலி](https://media.maalaimalar.com/h-upload/2023/10/26/1972273-9.webp)
X
சாலை விபத்தில் பெண் பலி
By
மாலை மலர்26 Oct 2023 3:40 PM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- கிழக்கு கடற்கரை சாலையில் காரில் சென்று கொண்டு இருந்தனர்.
- கார் எதிர்பாராத விதமாக பாலத்தில் மோதி கார் கவிழ்ந்தது.
பேராவூரணி:
மதுரை பழைய குயவர் பாளையம் பகுதியைச் சேர்ந்த அந்தோணி ராஜன் (வயது 50), இவரது மனைவி சகாயராணி (45), மகன் ஜெரோம் (15), மாமியார் சூசைமேரி(65) ஆகியோருடன் வேளாங்கண்ணி சென்று பேராலயத்தில் சாமி கும்பிட்டு விட்டு திரும்பி மதுரைக்கு செல்வதற்காக கிழக்கு கடற்கரை சாலையில் காரில் சென்று கொண்டு இருந்தார்.
காரை அந்தோணி ராஜன் ஓட்டினார்.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே சேதுபாவாசத்திரம் பிள்ளையார்திடல் சோதனை சாவடி அருகே சென்ற போது கார் எதிர்பாராத விதமாக பாலத்தில் மோதி கார் கவிழ்ந்தது.
இதில் காரில் பயணம் செய்த 4 பேரும் காயம் அடைந்தனர்.
பலத்த காயமடைந்த சூசைமேரி தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
X