என் மலர்
உள்ளூர் செய்திகள்
ஸ்ரீபெரும்புதூர் அருகே வீட்டில் மதுபாட்டில் பதுக்கி விற்ற பெண் கைது
- 175 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- போலீசார் கோர்ட்டில்ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
ஸ்ரீபெரும்புதூர்:
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கீவளுர் தண்டு மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள வீட்டில், டாஸ்மாக் கடையில் மது பாட்டில்களை மொத்தமாக வாங்கி பதுக்கி அதிக விலைக்கு விற்று வருவதாக ஸ்ரீபெரும்புதூர் போலீசாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் மற்றும் போலீசார் கீவளூர் பகுதியில் உள்ள பூசனம் என்பவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் ஏராளமான மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.
வடமாநில தொழிலாளர்களை குறிவைத்து மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு அவர் தொடர்ந்து விற்று வந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து பூசனத்தை கைது செய்தனர். அவரிடம் இருந்து மொத்தம 175 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
பின்னர் கைதான பூசனத்தை போலீசார் கோர்ட்டில்ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மதுபாட்டி ல்களை பதுக்கிவைத்து கூடுதல் விலைக்கு விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.