என் மலர்
உள்ளூர் செய்திகள்

X
வாழப்பாடி அருகே விஷம் குடித்த இளம்பெண் சாவு
By
மாலை மலர்5 May 2023 12:41 PM IST

- நேற்று முன்தினம் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
- இதனைக்கண்ட விக்னேஷும் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துள்ளார். இதில் காதலி சுபலேகா பரிதாபமாக உயிரிழந்தார்.
வாழப்பாடி:
வாழப்பாடி அடுத்த தூக்கியாம்பாளையம் எம்.ஜி.ஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 23). கட்டிடத்தொழி லாளி யான இவரும், அதே பகுதி யைச் சேர்ந்த இளம்பெண் சுபலேகா(18) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், இருவ ருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மனமுடைந்த சுபலேகா, நேற்று முன்தினம் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனைக்கண்ட விக்னேஷும் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துள்ளார். இதில் காதலி சுபலேகா பரிதாபமாக உயிரிழந்தார்.
விக்னேஷ், உயிருக்கு ஆபத்தான நிலையில் சேலம் அருகே தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
X