search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முத்து மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா
    X

    சிறப்பு அலங்காரத்தில் முத்து மாரியம்மன்.

    முத்து மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா

    • அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், கஞ்சி வார்த்தல், சக்தி கரகம் எடுத்தல், பூஜைகள் நடைபெற்றது.
    • முக்கிய நிகழ்ச்சியான சந்தன காப்பு அலங்காரம், தீபாராதனை, இரவு தெய்வீக வேடங்களுடன் அம்மன் வீதி உலா நடைபெற்றது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திட்டச்சேரி வெள்ளத்திடலில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 10-ஆம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

    தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், கஞ்சி வார்த்தல், சக்தி கரகம் எடுத்தல், பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து நேற்றுமுதல் நாள் முக்கிய நிகழ்ச்சியான சந்தன காப்பு அலங்காரம், தீபாராதனை, இரவு தெய்வீக வேடங்களுடன் அம்மன் வீதி உலா நடைபெற்றது. அம்மனுக்கு அபிஷேகம், அக்னி கப்பரை வீதி உலா நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    Next Story
    ×