search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடியில் இரும்பு கம்பிகள் திருட்டு-ஒருவர் கைது
    X

    தூத்துக்குடியில் இரும்பு கம்பிகள் திருட்டு-ஒருவர் கைது

    • அங்கு வைக்கப்பட்டு இருந்த இரும்பு கம்பிகள், கான்கிரீட் ஷீட்டுகள் உள்ளிட்டவை திருட்டு போயிருந்தது.
    • சிவலிங்கத்தை போலீசார் கைது செய்து பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகர் பி அன்ட் டி காலனியை சேர்ந்தவர் முருகன்(வயது 49). இவர் ஒப்பந்ததாரராக வேலை பார்த்து வருகிறார்.

    முத்தையாபுரத்தில் இருந்து துறைமுக கட்டுமான சாலை செல்லும் வழியில் சூசை நகருக்கு சற்று தொலைவில் தரைப்பாலம் கட்டும் பணியை இவர் செய்து வருகிறார். சம்பவத்தன்று அங்கு சென்று வேலையை ஆய்வு செய்து கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வைக்கப்பட்டு இருந்த இரும்பு கம்பிகள், கான்கிரீட் ஷீட்டுகள் உள்ளிட்டவை திருட்டு போயிருந்தது. இதுதொடர்பாக அவர் முத்தையாபுரம் போலீசில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மகாராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அதில் பொருட்களை திருடியது தூத்துக்குடி தங்கம்மாள்புரத்தை சேர்ந்த சிவலிங்கம், ஜெகன், மாரிலிங்கம், சரவணன் ஆகியோர் என்பது தெரியவந்தது.

    இதையடுத்து சிவலிங்கத்தை போலீசார் கைது செய்து பொருட்களை பறிமுதல் செய்தனர். தலைமறைவான மற்ற 3 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

    Next Story
    ×