என் மலர்
உள்ளூர் செய்திகள்

பிரசார வாகனங்களை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கொடியசைத்து தொடங்கி வைத்த காட்சி.
சாதனை விளக்க பிரசார வாகனங்கள்- ராஜா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- முதல்-அமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
- பிரசார வாகனங்களை தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சங்கரன்கோவில்:
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தென்காசி மாவட்டத்திற்கு நலத்திட்டங்கள் வழங்குவதற்கு வருகிற 8-ந்தேதி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் தமிழ்நாடு முதல்-அமைச்சருக்கு சிறப்பான முறையில் வரவேற்பு அளிப்பதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் நலத்திட்டங்கள், சாதனைகள் குறித்தும் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற மக்கள் நலத் திட்டங்கள் குறித்த 5 பிரசார வாகனங்களை தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் நகர செயலாளர் பிரகாஷ், ஒன்றிய செயலாளர்கள் சேர்மத்துரை, கிறிஸ்டோபர், பெரியதுரை, ராமச்சந்திரன், பேரூர் செயலாளர் மாரிமுத்து, மாவட்ட துணை அமைப்பாளர்கள் சேர்மன் பாலசுப்ரமணியன், உதயகுமார், ராயல் கார்த்திக், சதீஷ், வக்கீல் ஜெயக்குமார், வக்கீல் பிரபாகரன், சுப்புத்தாய், சண்முகராஜ், அலுவலக செயலாளர் சூரிய நாராயணன், இளைஞரணி பிரகாஷ், சங்கர், வீரமணி, கேபிள் கணேசன், ராஜவேல், பாரதி, கணேஷ், ஜெயராணி, இளைஞர் அணி பசுபதி பாண்டியன், தாஸ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.