என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![விவேகானந்தா வித்யாஷ்ரம் பள்ளி மாணவ-மாணவிகள் சாதனை விவேகானந்தா வித்யாஷ்ரம் பள்ளி மாணவ-மாணவிகள் சாதனை](https://media.maalaimalar.com/h-upload/2023/08/01/1925251-2vive.webp)
சாதனை படைத்த மாணவர்களை படத்தில் காணலாம்.
விவேகானந்தா வித்யாஷ்ரம் பள்ளி மாணவ-மாணவிகள் சாதனை
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- நெல்லை மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி விஜயநாராயணம் ரெக்ட் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது.
- விவேகானந்தா வித்யாஷ்ரம் பள்ளி 8-ம் வகுப்பு மாணவன் ரஞ்சித்குமார் வெண்கலப் பதக்கமும், மாணவிகள் பிரிவில் 6-ம் வகுப்பு மாணவி வேணுகா ஸ்ரீ வெங்கல பதக்கமும் வென்று சாதனை படைத்து உள்ளனர்.
நெல்லை:
சர்வதேச புலிகள் தினத்தை முன்னிட்டு பாளை அரசு அருங்காட்சி யகத்தில் நடைபெற்ற பள்ளி மாணவ-மாணவிகளுக்கான ஓவிய போட்டியில் வண்ணார்பேட்டை விவேகானந்தா வித்யாஷ்ரம் பள்ளி 6-ம் வகுப்பு மாணவி மஹன்யா, 3-ம் வகுப்பு மாணவன் பிரணவ் கார்த்திகேயன் மற்றும் மஹிந்தேவ் 3-ம் இடம் பிடித்து சாதனை படைத்தனர்.
நெல்லை மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி விஜயநாராயணம் ரெக்ட் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது. இதில் விவேகானந்தா வித்யாஷ்ரம் பள்ளி 8-ம் வகுப்பு மாணவன் ரஞ்சித்குமார் வெண்கலப் பதக்கமும், மாணவிகள் பிரிவில் 6-ம் வகுப்பு மாணவி வேணுகா ஸ்ரீ வெங்கல பதக்கமும் வென்று சாதனை படைத்து உள்ளனர். நெல்லை பிரஜா பிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் நடத்திய பள்ளி மாணவ-மாணவிகளுக்கான ஓவியப்போட்டியில் விவேகானந்தா வித்யாஷ்ரம் பள்ளி 11-ம் வகுப்பு மாணவி பெமினா ஷர்மி 2-ம் இடம் பிடித்து சாதனை படைத்தார்.
வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளை பள்ளியின் சேர்மன் சிவ சேதுராமன், தாளாளர் திருமாறன், முதல்வல் முருகவேல், பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் சண்முக ராணி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.