என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![குடியரசு தினத்தில் விடுமுறை அளிக்காத 60 நிறுவனங்கள் மீது நடவடிக்கை குடியரசு தினத்தில் விடுமுறை அளிக்காத 60 நிறுவனங்கள் மீது நடவடிக்கை](https://media.maalaimalar.com/h-upload/2023/01/27/1827487-03.webp)
குடியரசு தினத்தில் விடுமுறை அளிக்காத 60 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- விடுமுறை தினமான ஜனவரி 26 குடியரசு தினத்தன்று, நாமக்கல் மாவட்டத்தில் கடைகள் மற்றும் நிறுவனங்களில் ஆய்வு செய்யப்பட்டது.
- மொத்தம் 88 நிறுவனங்களில் ஆய்வு
நாமக்கல்:
தமிழக தொழிலாளர் துறை கமிஷனர் அதுல் ஆனந்த், கோவை கூடுதல் தொழிலாளர் கமிஷனர் குமரன், ஈரோடு தொழிலாளர் இணை கமிஷனர் சசிகலா ஆகியோர் உத்தரவின் பேரில், நாமக்கல் தொழிலாளர் உதவி கமிஷனர் (அமலாக்கம்) திருநந்தன் மேற்பார்வையில், தொழிலாளர் துணை ஆய்வாளர்கள் மற்றும் தொழிலாளர் உதவி ஆய்வாளர்களால் தேசிய மற்றும் விடுமுறை தினமான ஜனவரி 26 குடியரசு தினத்தன்று, நாமக்கல் மாவட்டத்தில் கடைகள் மற்றும் நிறுவனங்களில் ஆய்வு செய்யப்பட்டது.
17 நிறுவனங்களிலும், 51 ஹோட்டல்கள் மற்றும்
பேக்கரிகளை ஆய்வு செய்ததில் 37 நிறுவனங்களிலும், 7 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் ஆய்வு செய்ததில் 6 மோட்டார் போக்கு வரத்து நிறுவனங்களிலும் விடுமுறை அளிக்காமல் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் 88 நிறுவனங்களில் ஆய்வு செய்ததில் 60 நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு குடியரசு தினத்தன்று விடுமுறை அளிக்காமலும், அன்றைய தினம் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்க அல்லது மாற்று விடுப்பு வழங்க அனுமதி பெறாமலும் இருந்தது தெரியவந்தது. இதையொட்டி சம்பந்தப்பட்ட நிறுவனங்க ளின் உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ள தாக, தொழிலாளர் உதவி கமிஷனர் தெரிவித்துள்ளார்.