என் மலர்
உள்ளூர் செய்திகள்
கடலூரில் அதிரடி: சுருக்குமடி வலையை கைப்பற்றி சேதப்படுத்திய அதிகாரிகள்
- கடலூரில் சுருக்குமடி வலையை கைப்பற்றி அதிகாரிகள் சேதப்படுத்தினர்.
- தொடர்ந்து நடந்த ஆய்வின்போது மீன்பிடிப்பதற்கு உதவியாக இன்னொரு நாட்டு படகு நின்றது.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் மீன் வளத்துறை தடைவிதித்து உள்ளது. அதன்படி மீன் வளத்துறை அதிகாரிகள் கடல் பகுதியில் ரோந்து சுற்றி வருகிறார்கள். இன்று காலை மீன்வளத்துறை ஆய்வாளர் பதுருதீன் தலைமையில் சார் ஆய்வாளர் பிரபாகரன், கடல் மீன்பிடி சட்ட அமலாக்க பிரிவு காவலர் சாம்பவசிவம் மற்றும் ஊழியர்கள் கடல் பகுதியில் ரோந்து சென்றனர். சுபஉப்பலவாடி பகுதியில் ரோந்து சென்ற போது ஒரு படகில் சுருக்குமடி வலைலைய பயன்படுத்தி மீன் பிடித்ததை அதிகாரிகள் கண்டு பிடித்தனர். விசாரணையில் படகில் வந்த மீனவர்கள் புதுவை பனித்திட்டு பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது. உடனே மீன்வளத்துறை அதிகாரிகள் சுருக்குமடி வலையை பறிமுதல் செய்து அதனை பயன்படுத்த முடியாத அளவுக்கு சேதப்படுத்தினர். தொடர்ந்து நடந்த ஆய்வின்போது மீன்பிடிப்பதற்கு உதவியாக இன்னொரு நாட்டு படகு நின்றது. அதனையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.