என் மலர்
உள்ளூர் செய்திகள்
தென்காசி மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை - மருத்துவமனை கண்காணிப்பாளர் தகவல்
- தென்காசி அரசு தலைமை ஆஸ்பத்திரியில் தற்போது பரவி வரும் வைரஸ் காய்ச்சலால் அதிக அளவில் மாவட்டம் முழுவதும் இருந்து நோயாளிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.
- குடி நீர்க்காக ஏற்கனவே அனைத்து வார்டுகளிலும் 26 குடிநீர் சுத்திகரிப்பு எந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளது.
தென்காசி:
தென்காசி மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரியில் தினமும் சராசரியாக 400-க்கும் மேற்பட்ட உள்நோயாளிகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் சிகிச்சை பெற்று வருகின்ற னர்.
தற்போது பரவி வரும் வைரஸ் காய்ச்சலால் அதிக அளவில் மாவட்டம் முழு வதும் இருந்து நோயாளிகள் அனுமதிக் கப்படுகின்றனர்.
அவர்களுக்கு குடிப்ப தற்கு தேவையான குடி நீர்க்காக ஏற்கனவே அனைத்து வார்டுகளிலும் சேர்த்து 26 குடிநீர் சுத்திகரிப்பு எந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளது.
மேலும் கோடைகாலம் நெருங்கி வருவதாலும், கர்ப்பிணி பெண்களுக்கு சூடான குடிநீர் வழங்கு வதற்காகவும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட கலெக்டர் மற்றும் இணைஇயக்குனர் நலப்பணிகள் மருத்துவர் பிரேமலதா ஆகியோரின் ஆலோசனையின் படி, மருத்துவமனை கண்காணிப்பா ளர் மருத்துவர் ஜெஸ்லின் மற்றும் உரைவிட மருத்துவர் ராஜேஷ் முயற்சியில் 500 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. பொதுமக்களின் தேவை களை அவ்வப்போது ஆராய்ந்து அதனை உடனடி யாக நிவர்த்தி செய்ய எப்போதும் ஆஸ்பத்திரி நிர்வாகமும்,மாவட்ட நிர்வாகமும் தயாராக உள்ளது என்பதை தென்காசி மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரியின் கண்காணிப்பாளர் மருத்துவர் ஜெஸ்லின் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறும் போது, பொதுமக்கள் தண்ணீரின் தேவையையும், அவசியத்தை யும் உணர்ந்து, குடிநீரை சிக்கனமாகவும், வீணாக்கா மலும் பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்.