என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
மாமல்லபுரம் புராதன சின்னங்களை சுற்றி பார்க்க மாற்றுத்திறனாளிகள், முதியோருக்கு கூடுதல் வசதி
Byமாலை மலர்16 Feb 2023 6:07 PM IST
- ஜி-20 மாநாட்டு விருந்தினர், மாமல்லபுரம் வருகையின்போது புராதன சின்னங்கள் பகுதி பாதைகள் சீரமைக்கப்பட்டது.
- தொல்லியல்துறை டிக்கெட் கவுண்டர்களில் கூடுதல் வீல் சேர்கள் வைத்துள்ளனர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களான கடற்கரை கோயில், ஐந்துரதம், வெண்ணெய் உருண்டைக்கல் பாறை பகுதிகளில் சரியான சமநிலை கல்பாதை இல்லாததால் மாற்று திறனாளிகள், முதியவர்கள் வீல் சேரில் அருகில் சென்று பார்க்க முடியாத நிலை இருந்தது.
இந்நிலையில் அண்மையில் ஜி-20 மாநாட்டு விருந்தினர், மாமல்லபுரம் வருகையின்போது புராதன சின்னங்கள் பகுதி பாதைகள் சீரமைக்கப்பட்டது. இதில் மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள் வசதிக்கு ஏற்பவும் பாதை சம நிலையாக அமைக்கப்பட்டது. தற்போது பாதை பணிகள் முழுவதும் முடிவடைந்த நிலையில் அவர்கள் மகிழ்ச்சியுடன் அருகில் சென்று மாமல்லபுரம் புராதன சின்னங்களை பார்த்து ரசித்து வருகின்றனர். தொல்லியல்துறை டிக்கெட் கவுண்டர்களில் கூடுதல் வீல் சேர்களும் வைத்துள்ளனர்.
Next Story
×
X