என் மலர்
உள்ளூர் செய்திகள்

அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா பாதிக்கப்பட்ட மாணவர் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கினார்.
நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் நாங்குநேரி மாணவருக்கு அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஆறுதல்

- மாணவன் சின்னத்துரை, அவரது சகோதரி இருவரும் சக மாணவர்களால் அரிவாளால் தாக்கப்பட்டனர்.
- தச்சை கணேசராஜா அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று மாணவரிடம் நலம் விசாரித்தார்.
நெல்லை:
நாங்குநேரியை சேர்ந்த பள்ளி மாணவன் சின்னத்துரை மற்றும் அவரது சகோதரி இருவரும் சக மாணவர்களால் அரிவாளால் தாக்கப்பட்டு, நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த தகவலை அறிந்து நெல்லை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேசராஜா அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று மாணவரிடம் நலம் விசாரித்தார். பின்னர் அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, நிதியுதவி வழங்கினார். அப்போது நாங்குநேரி தெற்கு ஒன்றிய செயலாளர் விஜயகுமார், நாங்குநேரி பேரூர் செயலாளர் சங்கரலிங்கம், மேலப்பாளையம் கிழக்கு பகுதி செயலாளர் சண்முக குமார், மாவட்ட இளைஞர்-இளம் பெண்கள் பாசறை செயலாளர் முத்துப்பாண்டி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மதுரை மண்டல இணைச் செயலாளர் விக்னேஷ், பாளை பகுதி மாணவரணி செயலாளர் புஷ்பராஜ் ஜெய்சன், முன்னாள் அரசு வழக்கறிஞர் அன்பு அங்கப்பன், வட்ட செயலாளர்கள் பாறையடி மணி, ஜெகநாதன், கச்சி முகமது மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.