என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தீபாவளி பண்டிகை முடிந்து வெளியூர் சென்றனர்; தென்காசி பஸ், ரெயில் நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம்
    X

    தென்காசி ரெயில் நிலையத்தில் வெளியூர் செல்வதற்கு பொது மக்கள் கூட்டம் அலைமோதியது.

    தீபாவளி பண்டிகை முடிந்து வெளியூர் சென்றனர்; தென்காசி பஸ், ரெயில் நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம்

    • தீபாவளி தொடர்விடுமுறை முடிந்ததையடுத்து நேற்று காலை முதலே ஏராளமானவர்கள் மீண்டும் வெளியூருக்கு புறப்பட்டு சென்றனர்.
    • தென்காசி புதிய பஸ் நிலையத்தில் வெளியூர் செல்லும் பஸ்கள் முழுவதும் நிரம்பி சென்றது.

    தென்காசி:

    தீபாவளி பண்டிகை கடந்த 24-ந்தேதி உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் சொந்த ஊர்வந்தனர். அந்தவகையில் தென்காசி மாவட்டத்திற்கு ஏராளமானவர்கள் வந்தனர்.

    இந்நிலையில் தீபாவளி தொடர்விடுமுறை முடிந்ததையடுத்து நேற்று காலை முதலே ஏராளமானவர்கள் மீண்டும் வெளியூருக்கு புறப்பட்டு சென்றனர். இதற்காக சிறப்பு பஸ்களும் இயக்கபட்டது. இதனால் தென்காசி பஸ் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலை மோதியது. குறிப்பாக தென்காசி புதிய பஸ் நிலையத்தில் சென்னை, கோவை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் பஸ் முழுவதும் நிரம்பி சென்றது.

    இதேபோல் ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை சென்ற அனைத்து ெரயில்களிலும் மக்கள் போட்டி போட்டு முன்பதி வில்லாத பெட்டிகளில் இடம் பிடித்து பயணம் மேற்கொண்டனர்.

    Next Story
    ×