search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள்; கலெக்டர் வழங்கினார்
    X

    விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்களை கலெக்டர் சாரூஸ்ரீ வழங்கினார்.

    விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள்; கலெக்டர் வழங்கினார்

    • ரூ.57,927 மானியத்தில் நுண்ணீர் பாசனம் அமைக்கப்பட்டுள்ளதை ஆய்வு செய்தார்.
    • உளுந்து பயிர்களுக்கு டிரோன் மூலம் பூச்சிகொல்லி மருந்து தெளிப்பதை ஆய்வு செய்தார்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வேளாண் பொறியியல், வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை மற்றும் தோட்டக்கலை மற்றும் மலைபயிர்கள் துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து கலெக்டர் சாருஸ்ரீ வயல்வெளி ஆய்வு மேற்கொ ண்டு விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்களை வழங்கினார்.

    திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம், மழவராயநல்லூர் பகுதியில் வேளாண்மை பொறியியல் துறை சார்பில் பண்ணை குட்டை அமைக்கப்பட்டு ள்ளதையும், நெடுவாக்கோ ட்டை பகுதியில் விதைப்பண்ணை வயல் திட்டத்தின் கீழ் 5 ஏக்கர் (வல்லுநர் விதை) பயிரிடப்பட்டு உள்ளதையும், நீடாமங்கலம் வட்டம், முக்குளம் சாத்தனூர் பகுதியில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் ரூ.57927 மானியத்தில் நுண்ணீர் பாசனம் அமைக்க ப்பட்டு உள்ளதையும், நீடாமங்கலம் வட்டம், செருமங்கலம் பகுதியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் நெல் குறுவை 2023-24 திட்டத்தின் கீழ் 20 சென்ட் பரப்பளவில் (திருப்பதி சாரம் 5 ரகம்) எந்திர நடவு பாய் நாற்றாங்கால் அமைக்கப்பட்டு வருவதையும், எடகீழையூர் பகுதியில் உளுந்து விதைப் பண்ணை வயல் 2023-24 திட்டத்தின் கீழ் 1 ஏக்கர் பரப்பளவில் (வம்பன் 10) பயிரிடப்பட்டுள்ளதையும், உளுந்து பயிர்களுக்கு டிரோன் மூலம் பூச்சிகொல்லி மருந்து தெளிப்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து மாவட்ட கலெக்டர் சாரூஸ்ரீ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    முன்னதாக, மன்னார்குடி வட்டத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் பேட்டரி தெளிப்பான், தார்பாய், பண்ணைக்கருவிகள் உள்ளிட்ட வேளாண் இடுபொருட்களும், ஒரு பயனாளிக்கு உழவு செய்யும் எந்திரத்தையும் கலெக்டர் வழங்கினார்.

    ஆய்வின்போது, செயற்பொறியாளர், வேளாண்மை பொறியியல் துறை ரேணுகாந்தன், தோட்டக்கலை துறை துணை இயக்குநர் வெங்கட்ராமன், வேளாண்மை துணை இயக்குநர் (மாநில திட்டம்) லெட்சுமிகாந்தன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஏழுமலை, தாசில்தார் கார்த்தி, வேளாண்மை உதவி இயக்குநர்கள் (மன்னார்குடி) இளம்பூரணார், விஜயகுமார் (நீடாமங்கலம்) உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×