என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![ஆலங்குளம் காமராஜர் சிலை திறப்பு விழா பொதுக்கூட்டம்- விஜய் வசந்த் எம்.பி. பங்கேற்பு ஆலங்குளம் காமராஜர் சிலை திறப்பு விழா பொதுக்கூட்டம்- விஜய் வசந்த் எம்.பி. பங்கேற்பு](https://media.maalaimalar.com/h-upload/2023/07/16/1916107-vijay-vasanth.webp)
ஆலங்குளம் காமராஜர் சிலை திறப்பு விழா பொதுக்கூட்டம்- விஜய் வசந்த் எம்.பி. பங்கேற்பு
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- புதிய முழு உருவ வெண்கல சிலை அமைப்பதற்கான பணிகளை எச். வசந்த குமார் தொடங்கி வைத்திருந்தார்.
- முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராமசுப்பு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் காமராஜர் சிலை திறப்பு விழா பொதுக்கூட்டத்தில் கன்னியாகுமர் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினார். இதுதொடர்பாக விஜய் வசந்த் கூறியிருப்பதாவது:-
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் நகரில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களுக்கு புதிய முழு உருவ வெண்கல சிலை அமைப்பதற்கான பணிகளை எனது தந்தை அமரர் H. வசந்த குமார் அவர்கள் தொடங்கி வைத்திருந்தார். அவரது கனவை நிறைவேற்றும் வகையில் ஐயா காமராஜர் அவர்கள் பிறந்த தினத்தில் அவரது சிலை திறந்து வைக்கப்பட்டது. இரவு நடந்த பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராமசுப்பு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொது செயலாளர் எம்.எஸ்.காமராஜ், வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் எம்.எஸ்.திரவியம் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டு கர்மவீரருக்கு மரியாதை செலுத்தினோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதேபோல் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் விஜய் வசந்த் கலந்து கொண்டார்.