என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![ஸ்ரீவைகுண்டம் குமரகுருபரர் சுவாமிகள் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு ஸ்ரீவைகுண்டம் குமரகுருபரர் சுவாமிகள் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு](https://media.maalaimalar.com/h-upload/2022/12/26/1812626-2srivaialumnimeet.webp)
குமரகுருபரர் சுவாமிகள் மேல்நிலைப்பள்ளியில் பழைய மாணவ-மாணவிகள் சந்தித்து குழு புகைப்படம் எடுத்தனர்.
ஸ்ரீவைகுண்டம் குமரகுருபரர் சுவாமிகள் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- 1995-1997-ம் கல்வி ஆண்டில் படித்த முன்னாள் மாணவ, மாணவிகள் சந்திப்பு வெள்ளி விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
- முன்னாள் மாணவர்கள் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர்.
தென்திருப்பேரை:
ஸ்ரீவைகுண்டம் குமரகுருபரர் சுவாமிகள் மேல்நிலைப்பள்ளி 142 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. கடந்த 1995-1997-ம் கல்வி ஆண்டில் 11 முதல் 12ம் வகுப்பு வரை படித்த முன்னாள் மாணவ மாணவிகள் சந்திப்பு வெள்ளி விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
1995-1997-ம் கல்வி ஆண்டில் 11 முதல் 12-ம் வகுப்பு வரை படித்த மாணவ-மாணவிகள் வாட்ஸ்அப் குழு மூலம் ஒன்றிணைந்து முன்னாள் மாணவர்கள் சந்திப்பு வெள்ளிவிழா நிகழ்ச்சியை நடத்தினர்.
பள்ளியின் முன்னாள் மாணவர்கள் மட்டுமன்றி அப்போது பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஆசிரியர்களையும் அலுவலகப் பணியாளர் களையும், தற்போதைய ஆசிரியர்களையும் குடும்பத்தோடு பங்கேற்று அந்த காலகட்டத்தில் நிகழ்ந்த பழைய நினைவு களை மகிழ்வுடன் பகிர்ந்து கொண்டு நினைவுப் பரிசுகளை வழங்கினர். பின்னர் பல்வேறு விளையாட்டு போட்டிகளை நடத்தியதுடன் வெள்ளி விழா நினைவாக பள்ளிக்கு சுத்திகரிப்பு குடிநீர் எந்திரம் வழங்கியதுடன் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர்.
நிகழ்ச்சியில், குமரகுருபரர் சுவாமிகள் மேல்நிலைப் பள்ளி கல்வி அபிவிருத்தி சங்க செயலர் கோட்டை சண்முகநாதன், பள்ளி செயலர் முத்தையா, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் தியாகச்செல்வன், துணைத் தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி, நிர்வாக குழு உறுப்பினர் கோட்டை கணேசன்,
தலைமை ஆசிரியர் முத்து சிவன், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை ராணி, முன்னாள் ஆசிரியர்கள் விஸ்வநாதன், பட்டுப் பாண்டி, வைகுண்டராமன், தொழிலதிபர் கணேசன், பார்த்திப சங்கர், குமார வேல், முன்னாள் மாணவ- மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.