என் மலர்
உள்ளூர் செய்திகள்
ேகாவைப்புதூர் பத்ரகாளி அம்மன் கோவில் அமாவாசை பூஜை
- திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
- பக்தர்கள் தங்கள் தோஷம் நீங்க வரமிளகாய், நல்எண்ணை மற்றும் பூஜை பொருட்களை வழங்கினர்.
குனியமுத்தூர்,
கோவையை அடுத்த ேகாவைப்புதூரில் என் பிளாக்கில் ஸ்ரீ பத்ரகாளி அம்மன் சுடலை கருப்புசாமி, சித்தர் சக்தி நாதர் கோவில் அமைந்துள்ளது.
ஸ்ரீ சித்தர் சக்திநாதர் அறக்கட்டளையின் கீழ் இயங்கிவரும் இந்த கோவிலில் அமாவாசை பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். பிரத்தியங்கரா ஹோமம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் இதில் கலந்துகொண்டு தங்கள் தோஷம் நீங்க வரமிளகாய், நல்எண்ணை மற்றும் பூஜை பொருட்களை வழங்கினர். இதுகுறித்து ஸ்ரீசித்தர் சக்திநாதர் அறக்கட்டளையின் நிறுவனர் ஸ்ரீலஸ்ரீ பாலகிருஷ்ண சுவாமிகள் கூறுகையில், பிரதி மாதம் அமாவாசை தினத்தன்று இத்தகைய பிரத்தியங்கரா ஹோமம் நடைபெறும். இதனை நிகும்பலா யாகம் என்றும் கூறுவார்கள்.
நிகும்பலா யாகம் என்பது பிரத்தியங்கிரா தேவிக்கு செய்யப்படும் யாகம் ஆகும். யாகத்தில் இடப்படும் மிளகாய் காட்டம் ஏற்படுத்துவதில்லை என்பது சிறப்பாகும். இந்த யாகத்தில் கலந்து கொண்டால் அஷ்ட ஐஸ்வரியம் கிடைக்கும். இழந்த பதவி, செல்வாக்கு, மீண்டும் கிடைக்கும். எதிரிகளின் தொல்லை நீங்கும். உத்தியோக உயர்வு கிடைக்கும். புதிய வேலைவாய்ப்பு உண்டாகும். திருமணம், வியாபாரம் எதிர்பார்த்த முறையில் நடைபெறும். பக்தர்கள் தங்களது தோஷம் நீங்க இந்த யாகத்தில் அவசியம் கலந்துகொள்ள வேண்டும். கால் கிலோ வர மிளகாய்க்கு, முக்கால் லிட்டர் நல்எண்ணை மற்றும் பூஜை பொருட்களை வழங்கி யாகத்தில் கலந்து கொள்ளலாம். இனி ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தில் இரவில் இந்த ஹோமம் நடைபெறும். இதில் பக்தர்கள் பங்கேற்று பிரத்தியங்கரா தேவி அருள் பெற்று செல்லுமாறு கேட்டு கொள்கிறோம்
இவ்வாறு அவர் கூறினார்.