என் மலர்
உள்ளூர் செய்திகள்

ராசிபுரத்தில் அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியபோது எடுத்த படம்
ராசிபுரத்தில் அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
- அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பாக 10 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
- இதில் 200-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதிய பஸ் நிலையம் அருகில் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பாக 10 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிவகாமி தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் ஸ்ரீதர் பேசினார். இதில் 200-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
Next Story