என் மலர்
உள்ளூர் செய்திகள்
கொடைக்கானலில் கால்நடை பராமரிப்பு சிறப்பு முகாம்
- கொடைக்கானல் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் பாறைப்பட்டியில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
- முகாமில் 10 மாடுகளுக்கு செயற்கை முறை கருவூட்டல் ஊசி போடப்பட்டது. சினை பிடிக்காத மாடுகளுக்கு தாது உப்பு கலவை வழங்கப்பட்டது
கொடைக்கானல்:
கொடைக்கானல் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் பாறைப்பட்டியில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. கால்நடை உதவி இயக்குனர் பிரபு தலைமை தாங்கினார். அட்டுவம்பட்டி கால்நடை மருந்தக உதவி டாக்டர் அபிநயா தலைமையிலான மருத்துவக் குழுவினர் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர்.
குறிப்பாக கோழி கழிச்சல் தடுப்பூசி, குடற்புழு நீக்கம் மருந்து வழங்கப்பட்டது. முகாமில் 10 மாடுகளுக்கு செயற்கை முறை கருவூட்டல் ஊசி போடப்பட்டது. சினை பிடிக்காத மாடுகளுக்கு தாது உப்பு கலவை வழங்கப்பட்டது. மேலும் சிறந்த முறையில் கால்நடைகளை வளர்த்த விவசாயிகளுக்கு பரிசு பொருட்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
இந்த முகாமில் கால்நடை ஆய்வாளர்கள் சுரேஷ் பாபு, பத்மாவதி மற்றும் செயற்கை முறை கருவூட்டுனர் பழனிச்சாமி மற்றும் ஸ்ரீனிவாசா சேவைகள் அறக்கட்டளையின் நிர்வாகிகள் கள அலுவலர் விஜயகுமார், பொறியாளர் உதயகுமார், ராஜேஷ் கலந்து கொண்டனர். இந்த முகாமில் பாறைப்பட்டியை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் தங்கள் கால்நடைகளை அழைத்து வந்தனர்.