என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
கோரக்கர் சித்தர் ஆசிரமத்தில் அன்னாபிஷேகம்
Byமாலை மலர்29 Oct 2023 3:09 PM IST
- கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடத்தில் அபிஷேகம் நடைபெற்றது.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் அருகே வடக்கு பொய்கைநல்லூரில் உள்ள கோரக்க சித்தர் ஆசிரமத்தில் ஆண்டுதோறும் பவுர்ணமி ஐப்பசி பரணி விழா 2 நாள்கள் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான ஐப்பசி மாத பவுர்ணமி விழா நேற்று கோரக்க சித்தர் ஆசிரமத்தில் கோலாகலமாக தொட ங்கியது. இதை யொட்டி விழாவின் முதல் நாளான நேற்று அன்னாபிஷேகம் நடைபெ ற்றது.
முன்னதாக கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடத்தில் மஞ்சள், பால், தயிர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதை யடுத்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பி க்கப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story
×
X