என் மலர்
உள்ளூர் செய்திகள்

விழாவில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.
பழனி லட்சுமிநாராயணபெருமாள் கோவில் வருடாபிஷேகம்
- லட்சுமிநாராயண பெருமாள், சக்கரத்தாழ்வார், ஆஞ்சநேயர் ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றது.
- கோயில் சார்பில் பரிவட்டம் கட்டப்பட்டு மாலை மரியாதை செய்யப்பட்டது .
பழனி:
பழனியில் தண்டாயுதபாணி சுவாமி கோவிலின் உப கோவிலான பழனி லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் வருடாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி லட்சுமிநாராயண பெருமாள், சக்கரத்தாழ்வார், ஆஞ்சநேயர் ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் லட்சுமி நாராயண பெருமாள், கருடாழ்வார் உலா வந்தனர். முன்னதாக சிறப்பு யாகம் நடைபெற்றது. இதில் உபயதாரர் கந்தவிலாஸ் அதிபர்கள் செல்வகுமார், பிரேமாசெல்வகுமார் நவீன்விஷ்ணு, நரேஷ்குமரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் கந்த விலாஸ் செல்வகுமார் நவீன்விஷ்ணு நரேஷ்குமரன் ஆகியோருக்கு கோயில் சார்பில் பரிவட்டம் கட்டப்பட்டு மாலை மரியாதை செய்யப்பட்டது . இந்நிகழ்ச்சியில் முன்னாள் கோவில் கண்காணிப்பாளர் முருகேசன் , பழனி கோவில் கண்காணிப்பாளர் அழகர்சாமி மணியம் சேகர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்