என் மலர்
உள்ளூர் செய்திகள்

X
போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்த போது எடுத்த படம்
போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
By
மாலை மலர்18 Feb 2023 2:57 PM IST

- வள்ளியூர் மரியா பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
- லாரன்ஸ் மற்றும் தாளாளர் ஹெலன் போதை பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவிகளுக்கு அறிவுரைகளைக் கூறினார்.
வள்ளியூர்:
வள்ளியூர் மரியா பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நிறுவனத் தலைவர் பொறியாளர் லாரன்ஸ் தலைமையில், தாளாளர் ஹெலன் மற்றும் கல்லூரி முதல்வர் கிளாடிஸ் லீமா ரோஸ் முன்னிலையில் நடைபெற்றது. கல்லூரி நூலகர் சாரதாதேவி சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்டு போதை பொருள்கள் பற்றியும், அதனால் ஏற்படுகின்ற தீமைகள் பற்றியும் பேசினார்.
கல்லூரி தலைவர் பொறியாளர். லாரன்ஸ் மற்றும் தாளாளர் ஹெலன் போதை பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவிகளுக்கு அறிவுரைகளைக் கூறினார். முடிவில் மாணவிகளும், ஆசிரியைகளும் போதைப் பொருள் ஒழிப்பு குறித்த உறுதிமொழி ஏற்றனர். ஆங்கிலத்துறை பேராசிரியை ரெஜினா நன்றி கூறினார்.
Next Story
×
X