search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
    X

    மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

    • மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • 3000 கன அடி தண்ணீர் 15 நாட்களுக்கு திறக்க வேண்டும்.

    தரங்கம்பாடி:

    காவிரியில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விடவில்லை. கிருஷ்ணராஜ சாகர் அணையில் 100 அடிக்கு மேல் தண்ணீர் உள்ள நிலையில், கபினி அணையில் 70 அடிக்கு மேல் தண்ணீர் உள்ளது.

    பற்றாக்குறை காலங்களில் திறந்து விட வேண்டிய தண்ணீரை திறந்து விடாத நிலையில் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியும் காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் உத்தரவிட்ட 3000 கன அடி தண்ணீர் 15 நாட்களுக்கு திறக்க வேண்டும் என்ற உத்தரவையும் கர்நாடக அரசு மதிக்கவில்லை.

    காவிரியில் உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் பல்வேறு விவசாய சங்கங்கள் மற்றும் அரசியல் அமைப்புகள் சார்பில் மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் தலைமை தாங்கினார்.

    இதில் ஏராளமானோர் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

    Next Story
    ×