search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பேட்மிட்டன் போட்டியில் சாதனை படைத்த வீரர்களுக்கு பாராட்டு
    X

    பேட்மிட்டன் போட்டியில் சாதனை படைத்த வீரர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    பேட்மிட்டன் போட்டியில் சாதனை படைத்த வீரர்களுக்கு பாராட்டு

    • 11 வயதுக்கு உட்பட்ட வீரர், வீராங்கனைகளுக்கான தமிழ்நாடு பேட்மிட்டன் சேம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றன.
    • சாதனை படைத்த வீரர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினர்.

    பழனி:

    தமிழ்நாடு பேட்மிட்டன் அசோசியேசன் சார்பாக திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 20ந் தேதி முதல் 23-ந் தேதி வரை 11 வயதுக்கு உட்பட்ட வீரர், வீராங்கனைகளுக்கான தமிழ்நாடு பேட்மிட்டன் சேம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றன. இதில் தமிழ்நாடு முழுவதும் 280க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

    இதில் பெண்களுக்கான போட்டியில் திண்டுக்கல் மாவட்டம் பழனி கே.எஸ். பேட்மிட்டன் அகாடமியை சேர்ந்த வீரர்களான ஜெய சப்தா ஸ்ரீ சாம்பியன்ஷிப் பட்டத்தையும், ஆண்களுக்கான போட்டியில் சரண் 3-வது பரிசையும் பெற்றனர். சாம்பியன் பட்டம் பெற்ற ஜெயசப்தாஸ்ரீ அடுத்த வாரம் உத்திரபிரதேசம் நொய்டாவில் நடைபெற உள்ள தேசிய பேட்மிட்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் நேரடியாக கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

    பரிசை வென்ற ஜெய சப்தாஸ்ரீக்கு மற்றும் சரணுக்கு தமிழ்நாடு பேட்மிட்டன் அசோசியேசன் மாநிலச் செயலாளர் அருணாச்சலம், துணைத் தலைவர் மாறன் ஆகியோர் பரிசுகள் வழங்கி பாராட்டினர்.

    மேலும் மாவட்ட பேட்மிட்டன் செயலாளர் நாராயணன், வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பழனி பேட்மிட்டன் அகாடமியின் பயிற்சியாளர் சதீஷ்குமார் ஆகியோர் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

    Next Story
    ×