என் மலர்
உள்ளூர் செய்திகள்
ஆபாச சைகை காட்டி மாணவியிடம் தகராறு
- கல்லூரிக்கு நடந்து சென்றார்
- மொபட் எண்ணை கொடுத்து புகார் தெரிவித்தார்
கோவை
கோவை பீளமேடு எல்லை தோட்டம் ரோட்டை சேர்ந்தவர் 20 வயது இளம்பெண். இவர் கோவை பீளமேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.
சம்பவத்தன்று இவர் கல்லூரிக்கு நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக மொபட்டில் வந்த வாலிபர் ஒருவர் திடீரென அந்த மாணவியை தடுத்து நிறுத்தி ஆபாசமாக பார்த்து சைகை காட்டி தகராறில் ஈடுபட்டார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த மாணவி சத்தம் போட்டார்.
அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் வருவதை பார்த்து அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி சென்றார். உடனே மாணவி, அந்த வாலிபரின் மொபட் எண்ணை குறித்து கொண்டார். பின்னர் பீளமேடு போலீசில் நிலையம் சென்றார்.
அங்கு போலீசாரிடம் மாணவி நடந்தவற்றை கூறினார். அந்த வாலிபரின் மொபட் எண்ணை கொடுத்து புகார் தெரிவித்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் மொபட்டில் வந்து ஆபாசமாக சைகை காட்டியது காந்திபுரம் 4-வது வீதியை சேர்ந்த சுரேஷ்குமார் (27) என்பதும், இவர் கூரியர் நிறுவனத்தில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.
இவர் மாணவி தனியாக நடந்து சென்றதை பார்த்து இந்த செயலில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சுரேஷ்குமாரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.