என் மலர்
உள்ளூர் செய்திகள்
அனுமதியின்றி போராட்டம் நடத்தினால் கைது செய்யப்படுவது வழக்கம்: பாரதீய ஜனதாவுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் - அமைச்சர் கீதாஜீவன் பேச்சு
- தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பிரதிநிதி கள் கூட்டம் கலைஞர் அரங்கில் அவைத்தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது.
- இந்தி கட்டாயம் என்று சொல்லி வேலை வாய்ப்பை ஒன்றிய அரசு தடுக்கிறது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பிரதிநிதி கள் கூட்டம் கலைஞர் அரங்கில் அவைத்தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது.
மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்த சேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வடக்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான கீதாஜீவன் பேசியதாவது:-
இந்தி திணிப்பை ஒன்றிய அரசு செய்து வருவதை தடுக்கும் விதமாக ஒன்றியம், நகரம், பேரூர், பகுதி, கிளைக்கழகம் வரை கூட்டங்கள் நடத்தி அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இந்தி கட்டாயம் என்று கூறுவதை நாம் எதிர்க்கின்றோம். படிப்ப வர்கள் படிக்கட்டும். அதற்கு ஆட்சேபனை இல்லை.
அண்ணாமலைக்கு பதிலடி
தமிழர்கள் உலகம் முழுவதும் பணி செய்து வளர்ச்சி அடைந்துள்ளனர். அதை தடுக்கும் விதமாக இந்தி கட்டாயம் என்று சொல்லி வேலை வாய்ப்பை ஒன்றிய அரசு தடுக்கிறது.
ஒவ்வொரு மாநிலத்திற்கு தாய் மொழி என்றிருக்கிறது. அதே போல் இங்கு துணை மொழியாக ஆங்கிலம் இருக்கிறது. இந்தி, ஆங்கிலம் போன்ற எழுத்து தேர்வுகள் மூலம் தேர்ச்சி பெற்று அரசு பணிக்கு செல்லுகின்றவர்கள் இந்தி மட்டும் தான் என்றால் தமிழர்கள் பாதிக்கப்ப டுவார்கள். அதைத் தான் நாம் எதிர்க்கின்றோம்.
முதல்-அமைச்சர் ஸ்டாலின் உத்தரவுப்படி இந்தி திணிப்பை ஏன் தி.மு.க. எதிர்க்கிறது என்ற விளக்க நோட்டீஸை வீடுகள் தோறும் கொண்டு சேர்க்க வேண்டும்.
அனுமதியின்றி போராட்டம் நடத்தினால் அது அண்ணாமலை யல்ல யாராக இருந்தாலும் கைது செய்யப்படுவது வழக்கமான ஒன்றுதான். இதில் அரசியல் செய்து குளிர்காய நினைக்கும் பாரதிய ஜனதாவுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும்.
முதல்-அமைச்சரை குறை சொல்ல யாருக்கும் அருகதை கிடையாது. 2024 தேர்தலில் பி.ஜே.பி.க்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும்.
இவ்வாறு பேசினார்.
பின்னர் மேயர் ஜெகன் பெரியசாமி பேசியதாவது:-
பொய் பிரசாரம்
முதல்-அமைச்சரின் சாதனைகளை பொறுத்து கொள்ள முடியாத பா.ஜ.க. பொய் பிரச்சாரங்களை பரப்பி கொண்டு என்ன செய்கின்றோம் என்று தெரியாமல் பேசி வருகி ன்றன. அதிலும் அண்ணாமலை அதிகமாக பேசி வருகிறார்.
பல இணைய தள வாட்ஸ்-அப்களில் நம் தலைவரையும், கழகத்தையும் குறை கூறி வருகி ன்றன. அதற்கு அனைவரும் உடனடியாக பதிலடி கொடுக்க வேண்டும். ஒன்றரை ஆண்டுகால ஆட்சியில் யாரும் குறை சொல்ல முடியாத படி இந்தியாவிற்கே வழிகாட்டும் வகையில் ஆட்சி செய்து வருகிறார் முதல்வர்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டாவது முறையாக தி.மு.க. தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கும், துணை பொதுச்செய லாளராக கனிமொழி எம்.பி. தேர்வு செய்யப்பட்டதற்கும், தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவிப்பது, தமிழகம் முழுவதும் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டங்கள் மற்றும் அதுகுறித்த துண்டு பிரசுரங்கள் அச்சிட்டு வீடுகள் தோறும் வழங்க தலைமை கழகம் நமக்கு அறிவுறுத்தி யுள்ளது. இப்பணியை சிறப்பாக செய்வது உள்பட 6 தீர்மா னங்கள் நிறைவேற்ற ப்பட்டன.
கூட்டத்தில் மாநில மீனவரணி துணைச் செயலா ளர் புளோரன்ஸ், துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட துணைச் செயலாளர்கள் ஆறுமுகம், ராஜ்மோகன் செல்வின், ஏஞ்சலா, பொரு ளாளர் ரவீந்திரன், மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் நிர்மல்ராஜ், கலைச்செல்வி, மாநகர துணைச்செயலாளர்கள் கனகராஜ், பிரமிளா, மாவட்ட அணி நிர்வாகிகள் கஸ்தூரிதங்கம், உமாதேவி, மதியழகன், ஜெபசிங், அபிராமி நாதன், அந்தோணிகண்ணன், பிரதீப், கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி, ஒன்றிய குழு தலைவர் கஸ்தூரி, பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, ராஜா, வசந்தம் ஜெயக்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், சக்திவேல், சேர்மபாண்டியன், ராஜ்குமார், இசக்கிராஜா, சுந்தரவேல், ஒன்றிய செயலா ளர்கள் காசிவிஸ்வநாதன், முருகேசன், ராதாகிருஷ்ணன், சின்னமாரித்து, செல்வராஜ், அன்புராஜ், ராமசுப்பு, மூம்முர்த்தி, நவநீதிகண்ணன், சின்னபாண்டியன், சுப்பிரமணியன், பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், ஜெயக்குமார், மேகநாதன், ராம கிருஷ்ணன், சுரேஷ் குமார், மாநகர அணி நிர்வாகிகள் அருண்குமார், ஜெயக்கனி, டேனி, அருண்சுந்தர், சங்கர நாராயணன், முன்னாள் கவுன்சிலர்கள் செந்தில் குமார், செல்வகுமார், கருணா, ரவி, பிரபாகர், உள்பட பலர் கலந்து கொண்டனர்.