என் மலர்
உள்ளூர் செய்திகள்
பெருங்குறிச்சியில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் பொதுக்குழு கூட்டம்
- பெருங்குறிச்சி கிராம த்தில் பீமேஸ்வரர் மற்றும் முன்னேறு உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
- பெருங்குறிச்சி, குப்பிரிக்காபாளையம் மற்றும் சுள்ளிப் பாளையம் ஊராட்சி தலைவர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பெருங்குறிச்சி கிராம த்தில் பீமேஸ்வரர் மற்றும் முன்னேறு உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு சீட்ஸ் ஆதார நிறுவனத்தின் செயலாளர் பாண்டியன் தலைமை தாங்கினார். பீமேஸ்வரர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் தலைவர் பிரபாகர் முன்னிலை வைகித்தார்.
சிறப்பு விருந்தினர்களாக பரமத்தி வட்டார வேளா ண்மை உதவி இயக்குனர் கோவிந்தசாமி, கபிலர்மலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராதாமணி ஆகியோர் கலந்துகொண்டு வேளாண் திட்டத்தின் பலன்கள் மற்றும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து விவசாயிகளிடையே விளக்கமாக உரையாற்றி னார்கள்.
சிறப்பு அழைப்பாளர்களாக கபிலர்மலை வட்டார தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் சின்னதுரை, பரமத்தி வட்டார தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் தமிழ்ச்செல்வன், பரமத்தி வட்டார வேளாண்மை அலுவலர் பாபு, பரமத்தி வட்டார தோட்டக்கலைத் துறை அலுவலர் மஞ்சு, கபிலர்மலை வேளாண்மை அலுவலர் அன்புச்செல்வி, கபிலர்மலை தோட்டக்கலைத் துறை அலுவலர் சுகந்தி, தொழில் நுட்ப பிரிவைச் சேர்ந்த துரை, சீட்ஸ் ஆதார நிறுவனம் மற்றும் உதவி வேளாண்மை துறை மற்றும் தோட்டக்கலை துறை அலுவலர்கள், பெருங்குறிச்சி, குப்பிரிக்காபாளையம் மற்றும் சுள்ளிப் பாளையம் ஊராட்சி தலைவர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.
ஆண்டறிக்கையை கார்த்திகா மற்றும் பிரவீன் குமார் ஆகியோர் வாசித்தனர்.சீட்ஸ்ஆதாரம் நிறுவனத்தின் மண்டல ஒருங்கிணைப்பாளர் வினோத்குமார் விழாவை முன்னின்று நடத்தினார். முடிவில் முன்னேறு உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் தலைவர் ஆறுமுகம் நன்றி கூறினார்.