என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![அத்திகடவுஅவினாசி திட்டத்தை முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார் அத்திகடவுஅவினாசி திட்டத்தை முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார்](https://media.maalaimalar.com/h-upload/2023/01/18/1823237-minister-muthusamy.webp)
அத்திகடவுஅவினாசி திட்டத்தை முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- அவினாசி திட்ட நீரேற்று நிலையத்தை வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- ஆங்காங்கே சிறு சிறு பணிகள் மட்டுமே உள்ளது.6 பம்பிங் ஸ்டேஷனும் தயார் நிலையில் உள்ளது
ஈரோடு அடுத்த காளிங்கராயன் பாளையத்தில் அத்திக்கடவு -அவினாசி திட்ட நீரேற்று நிலையத்தை வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அத்திக்கடவு-அவினாசி திட்டம் மிக விரைவுபடுத்தி பணிகள் நடைபெற்று வருகிறது.ஜனவரி கடைசியில் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு அதன்பிறகு 10 நாட்கள் சோதனை ஓட்டம் நடைபெறும்.பிப்ரவரி 15 ல் திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.தற்போது அனைத்து பணிகளும் நிறைவு பெற்றது.
ஆங்காங்கே சிறு சிறு பணிகள் மட்டுமே உள்ளது.6 பம்பிங் ஸ்டேஷனும் தயார் நிலையில் உள்ளது.1045 குளத்தில் 750 குளங்களுக்கு தண்ணீர் செல்ல அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு–ள்ளது.200 குளத்திற்கான பணிகள் இந்த மாத இறுதிக்குள் நிறைவு செய்யப்படும்.
சோதனையோட்டத்திற்குள் மீதமுள்ள அனைத்து பணிகள் நிறைவு பெறும். தற்போது 99 சதவீத பணிகள் நிறைவடைந்து ள்ளது.முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இத்திட்டத்தை திறந்து வைக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.