search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏ.டி.எம். எந்திரங்களில் கொள்ளை தடுக்க வங்கி அதிகாரிகளுக்கு போலீசார் ஆலோசனை
    X

    கூட்டத்தில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.

    ஏ.டி.எம். எந்திரங்களில் கொள்ளை தடுக்க வங்கி அதிகாரிகளுக்கு போலீசார் ஆலோசனை

    • 4 ஏ.டி.எம்.களை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டது. மீண்டும் இதுபோன்ற கொள்ளைச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள பல்வேறு வங்கிகளின் பிரதிநிதிகளுடன் போலீசார் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
    • கூட்டத்திற்கு ஏற்காடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சபாபதி தலைமை வகித்தார். இதில், 10 வங்களின் பொது மேலாளர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    ஏற்காடு:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஏ.டி.எம்.களை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டது. மீண்டும் இதுபோன்ற கொள்ளைச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இதையடுத்து, சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள பல்வேறு வங்கிகளின் பிரதிநிதிகளுடன் போலீசார் ஆலோசனை கூட்டம் நடத்தினர். கூட்டத்திற்கு ஏற்காடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சபாபதி தலைமை வகித்தார். இதில், 10 வங்களின் பொது மேலாளர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இதில், வங்கி, ஏ.டி.எம் மையங்களில் உள்ள பணத்தைக் கண்காணிக்க, மறைமுக காமிராக்களை நிறுவ வேண்டும். முகத்தை அடையாளம் காண உதவும் மென்பொருள் அடங்கிய காமிராக்களை அனைத்து ஏ.டி.எம்.களிலும் பொருத்த வேண்டும். ஏ.டி.எம்.களை உடைக்கப்படும்போது எச்சரிக்கை மணி வங்கியில் மட்டுமின்றி, அருகில் உள்ள போலீஸ் நிலையங்களிலும் ஒலிக்கும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும் என பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டது. அவற்றை உடனடியாக செயல்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டது.

    இக்கூட்டத்தில் உதவி ஆய்வாளர்கள் ஆனந்தன், குணசேகரன், பரந்தாமன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×