என் மலர்
உள்ளூர் செய்திகள்
அட்மா திட்ட பயிற்சி முகாம்
- ஏத்தாப்பூர்க்கு விவசாயிகளை அழைத்து செல்லப்பட்டது.
- ஆத்தூர் ஜானகி முன்னிலை வகித்து விவசாயிகளை அனுப்பி வைத்தார்.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டார அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகள் கண்டுணர்வு சுற்றுலாவாக ஏத்தாப்பூர் வசிஷ்டா உழவர் உற்பத்தியாளார் நிறுவனம் ஏத்தாப்பூர்க்கு விவசாயிகளை அழைத்து செல்லப்பட்டது. வேளாண்மை உதவி இயக்குனர்(பொ) ஆத்தூர் ஜானகி முன்னிலை வகித்து விவசாயிகளை அனுப்பி வைத்தார்.
அட்மா திட்ட தலைவர் டாக்டர் செழியன் தலைமை வகித்து கொடி அசைத்து தொடங்கினார். அதனை தொடர்ந்து வசிஷ்டா நிறுவன தலைவர் அபினவ் ஜெயராமன் விவசாயிகளுக்கு உழவர் உற்பத்தியாளார் நிறுவனத்தின் செயல்பாடுகள் அதன் நோக்கம் விவசாயிகள் குழுக்களாக இனைந்து செயல்பட்டால் கிடைக்கும் நன்மைகள் குழுக்களாக இணைந்து எவ்வாறு சந்தைப்படுத்தாலாம் என விளக்கம் அளித்தார்.
முடிவில் அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுமித்ரா கலந்துகொண்டு அட்மா திட்டம் செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளித்தார். உதவி தொழில்நுட்ப மேலாளார் தமிழ்ச்செல்வி, திலகவதி மற்றும் 50 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்.