என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![முதியவர் மீது தாக்குதல் முதியவர் மீது தாக்குதல்](https://media.maalaimalar.com/h-upload/2022/06/16/1713333-5.jpg)
முதியவர் மீது தாக்குதல்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
நன்னிலம்:
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அடுத்துள்ள குருங்குளம் அக்ரஹாரத் தெருவில் வசித்த தற்போது சென்னை சாலிகிராமம் ஆற்காடு ரோடு வசித்து வருபவர் சந்திரசேகரன் (வயது 65). குருங்குளம் கிராமத்தில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் மற்றும் பூமி நிலை வரதராஜ பெருமாள், பிடாரி கோயிலுக்கு சொந்தமான நிலங்களை சந்திரசேகரன், இவரது தந்தை மற்றும் பாட்டனார் நிர்வகித்து வந்துள்ளனர். இந்நிலையில், தற்போது சந்திரசேகரன் பராமரித்து வந்தார்.
இவர்களின் பராமரி ப்பில் இருக்கும் நிலம் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமானது. இந்த இடத்தை குருங்குளம் ஜெயன் மகன் செல்வம் ஆக்கிரமித்து உள்ளார். இதனைக் கேள்விப்பட்ட சந்திரசேகரன், அறநிலையத்துறை அலுவலகத்தில் புகார் செய்து அதன் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு கோயிலுக்கு சொந்தமான நிலங்களை தனது பாதுகாப்பிற்கு கொண்டு வந்தார்.
இந்த சொந்த ஊருக்கு வந்த சந்திரசேகரனை ஜெயன் மகன் செல்வம், சுகுமாரன், சாமிநாதன் மற்றும் ஜெயன் மகள் தமிழரசி ஆகியோர் தாக்கியுள்ளனர். இதுகுறித்து சந்திரசேகரன் பேரளம் போலீசில் தெரிவித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.